காலிஃப்ளவர் - பசலை கீரை சூப்
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை - 1 கட்டு
காலிஃப்ளவர் (சிறு துண்டுகளாக) - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு (விரும்பினால்) - 4 பல்
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
• பசலைக் கீரையை சுத்தம் செய்யுங்கள்.
• பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
• வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.
• இரண்டையும் ஒன்றாக, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து இறக்குங்கள்.
• 5 நிமிடம் கழித்து திறந்து, கீரை, வெங்காயம் இரண்டையும் வடித்து எடுத்து ஆறவிடுங்கள்.
• பிறகு, மிக்சியில் அதை அரைத்து வேகவைத்த தண்ணீரில் சேருங்கள். • காலிஃப்ளவரை சிறிது உப்பு சேர்த்து அரைவேக்காடு வேகவைத்தெடுங்கள்.
• வெண்ணெயை உருக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மைதா சேருங்கள். சிறு தீயில் மைதாவை நன்கு வதக்கி பால் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி, கீரை-வெங்காயக் கலவை, காலிஃப்ளவர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறுங்கள்.
Key word: காலிஃப்ளவர் - பசலை கீரை சூப்

No comments:
Post a Comment