Pages

Monday, 25 June 2012

நாவல்பழம் சீசன் துவக்கம்

நாவல்பழம் சீசன் துவக்கம்:


உற்பத்தி குறைந்ததால் மருத்துவ குணம் மிகுந்த நாவல்பழம் விலை உயர்ந்துள்ளது.
பழங்களில் அதிக மருத்துவ குணம் நிறைந்தது நாவல்பழம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. புராண காலம் முதல் சுட்டப்பழம் என புகழ்பெற்ற நாவல்பழங்கள் ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவு உற்பத்தியாகி விற்பனைக்கு வரும்
.
தற்போது போதிய விளைச்சல் இல்லாததால் சீசன் துவங்கியும் குறைந்த அளவில் நாவல் பழங்களே உற்பத்தியாகி விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன. முதல்ரக நாவல்பழம் கிலோ ஒன்றிற்கு 240 ரூபாய்க்கும், அடுத்த ரகம் 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இது குறித்து பழ வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட முதல்ரக நாவல்பழம் தற்போது 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு நாவல்பழ சீசன் நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை என கூறினர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads