Pages

Thursday, 14 June 2012

இசைக் கருவிகள்


 இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் தயாரிக்கப்படும் பல்வேறு இசைக் கருவிகள், வெளிநாடுகளில் புகழ்பெற்று வருகின்றன.
 உலகில் அனைத்து தரப்பினரையும், ஒருசேர கவரக்கூடிய இசைக் கருவிகள், கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில், பெரிய அளவில் தயாரிக்கப்படுகின்றன. தபேலா, மிருதங்கம், தவில், கஞ்சிரா, உறுமி, உடுக்கை உட்பட பல இசைக் கருவிகள் அங்கு தயாராகின்றன. இத்தகைய இசைக் கருவிகள், பண்ருட்டி பகுதியில், 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பலா மரங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளைச் சேர்ந்த பலா மரங்களை ஒப்பிடுகையில், பண்ருட்டி பலா மரங்களில் செய்யும் இசைக் கருவிகள், மெல்லிய சப்தங்களுடன், கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என, இசை வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்தியாவிலேயே, சென்னையிலிருந்து தான், வெளிநாடுகளுக்கு அதிகளவில் இசைக் கருவிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சமர்ப்பணம்: இதுகுறித்து, இசைக் கருவிகள் தயாரிக்கும் கலைஞர் குப்புசாமி கூறியதாவது: பண்ருட்டியில் நான்கு இடங்களில், இசை கருவிகள் தயாரிக்கப் படுகின்றன. கடந்த 55 ஆண்டுக்கு மேலாக, பாரம்பரியமாக, இசைக் கருவிகள் தயாரிக்கும் தொழிலைச் செய்கிறோம். இங்கு தயாரிக்கப்படும் கருவிகளுக்கு, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில், நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவிலேயே, வீணை தயாரிப்புக்கு, இங்கிருந்து தான் மரங்களை அனுப்புகிறோம். பலா மரங்களை பதப்படுத்தி கடைந்து, பல வகையான இசைக் கருவிகளை தயார் செய்கிறோம். இந்த தொழிலை, கடவுளுக்கு செய்யும் சமர்ப்பணமாக நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இசைக்கருவி விலை (ரூ.)
மிருதங்கம் 3500
தவில் 9000
தபேலா 2000
கஞ்சிரா 400
உறுமி 1000
உடுக்கை 1000
செண்டை மேளம் 4000
Kewy word:இசைக்கருவி

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads