Pages

Saturday, 9 June 2012

செவ்வாய் தோஷம் என்றால் என்ன ?


செவ்வாய் தோஷம்.
 இதைக் கேட்டவுடன் அலறுபவர்கள் பலர். காரணம், கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷம் இது.
ஆனால் செவ்வாய் தோஷம் என்றாலே சிக்கல்தானா, உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பது குறித்து முழுமையான ஜோதிட தகவல்களை அறிந்து கொள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் சக்தி கிருஷ்ணகுமாரை சந்தித்து பேசினோம்.
அவர் கூறியதாவது:
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
ஆனால் இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.
சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.
சிம்மம், அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
2 -  இடம் மிதுனம், அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமில்லை.  
4 - ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை.
 7 - ம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை.
8 - ம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் அங்காரகன் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷமில்லை.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads