Pages

Saturday, 9 June 2012

பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷங்கள்


பத்மநாபசுவாமி கோவிலில் திருவனந்தபுரம்:


திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் 'சி' ரகசிய அறையில் உள்ள வைரம், ரத்ன கற்களை கணக்கிடும் பணி தொடங்கியது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. முதலில் இ, எப் அறையில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடப்பட்டன. இந்நிலையில் பைங்குனி திருவிழாவை முன்னிட்டு 30 நாட்கள் பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. திருவிழா முடிந்ததையடுத்து கணக்கிடும் பணி நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. 'சி' அறையில் உள்ள வைரங்கள், ரத்தினங்கள், மாணிக்க கற்கள் போன்றவை கணக்கிடப்பட்டு வருகிறது.
இந்த அறையில் உள்ள பூஜை பொருட்களில் ஏராளமான வைரம், ரத்தினம் உள்ளிட்ட கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ரத்தின கற்களை மதிப்பிட பல வாரங்களாகும் என தெரிகிறது. ரத்தின கற்களை மதப்பிடும் பணி முடிந்ததும் இ, எப் அறைகளில் உள்ள மீதமுள்ள பூஜை பொருட்களும், ரத்தினங்களும் கணக்கிடப்படும்.
இது குறித்து வல்லுனர் குழு தலைவர் எம்.வி. நாயர் கூறுகையில்,
சுரங்கம் மற்றும் நிலவியல் துறை தலைவர் சி பலராமன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு சி அறையில் உள்ள பொக்கிஷங்களை கணக்கிடத் துவங்கியுள்ளனர். இதுவரை சி அறையில் 90 சதவீத பொருட்களும், இ மற்றும் எப் அறைகளில் 60 சதவீத பொருட்களும் மதிப்பிடப்பட்டுள்ளன என்றார்.
Key word:பத்மநாபசுவாமி கோவிலில் திருவனந்தபுரம்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads