Pages

Saturday, 9 June 2012

சுருக்கம் வேண்டாம்! பளபளப்பு வேணும்!

சுருக்கம் வேண்டாம்! பளபளப்பு வேணும்!

வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, இதோ சில டிப்ஸ்கள்....
சோப்பின் பயன்பாடு......
சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப்பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும்.
பேஸ் வாஷ் கொண்டு, முகத்தை கழுவும் போது, ஒரு நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் முகத்தில் காணப்படும் அழுக்கு மற்றும் முன்னர் போட்ட மேக்-அப் ஆகியவை முற்றிலும் நீங்கும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம். அப்போது தான் முகம் புத்துணர்ச்சியுடன் இளமையாக தோற்றமளிக்கும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads