Pages

Wednesday, 13 June 2012

பொதுக்கொள்கை மேலாண்மை படிப்பில் ஆர்வமா

 இந்திய மக்கள் தொகையில் 70%க்கும் மேற்பட்டோர், இந்திய மக்கள், கல்வியறிவுபெற்ற, திறமைவாய்ந்த, பொது பிரச்சினைகளை நிர்வகிக்கத் தகுந்த மற்றும் பயன்மிக கொள்கைகளை உருவாக்கத் தெரிந்த தலைவர்களை எதிர்பார்க்கின்றனர்.


கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு முன்பாக உள்ள பெரிய சவால் என்னவெனில், நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு, அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் தீர்வுகண்டு, ஜனநாயக மாண்புகளைப் பாதுகாத்து, அதன்மூலம் சர்வாதிகாரம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதாகும்.
மேற்கூறிய தேவைகளால், பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மை தொடர்பான படிப்பிற்கு இளைஞர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. முதுநிலையில் வழங்கப்படும் இந்தப் படிப்பானது, எதிர்கால தலைவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ், சமூகம், உள்கட்டமைப்பு மற்றும் தனியார் துறைகளில் உள்ள நிபுணர்ளுக்கு பயிற்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்
பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மை என்பது ஒரு பழைய படிப்பாகும். இதை IIM-Bangalore. MDI, Gurgaon, TERI University (Public Policy and Sustainable Development) and OP Jindal Global University (kicks off this academic year) போன்ற கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஐஐம் - அகமதாபாத் முன்பு இப்படிப்பை வழங்கி வந்தது. ஆனால் தற்போது அதையே சற்று மாற்றம் செய்து, வரும் 2014 முதல் மீண்டும் வழங்கவுள்ளது.
இப்படிப்பில், முன்பெல்லாம் பொதுவாக பலவிதமான அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள்தான் சேருவார்கள். ஆனால், தற்போது, அதுமாதிரி அரசு ஏஜென்சிகளின் நிதியுதவி பெறும் நபர்கள் தவிர, இதர நபர்களும் சேர்ந்து படிப்பது அதிகரித்து வருகிறது.
படிப்பின் உள்ளடக்கம்
இந்த 2 வருட முதுநிலை படிப்பானது, தாராளமயம், உலகமயம் மற்றும் பெருகிவரும் தொழில்நுட்பங்களால் மாறும் வாழ்க்கை, வறுமை, சமூக புறக்கணிப்பு மற்றும் இடர்பாடுகள் ஆகிய சூழல்களை சமாளிக்கும் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதாக உள்ளது. பொதுக்கொள்கை வகுப்பதில் தேவைப்படும் கருத்தாக்க, தொழில்நுட்ப மற்றும் பகுப்பாய்வு சிந்தனைகளை ஆப்படுத்துகிறது இந்தப் படிப்பு.
பொருளாதாரம், கொள்கை, நிதி, மேலாண்மை, மார்க்கெடிங், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கட்டுரை எழுதுதல், மேம்பாட்டு படிப்புகள், சுற்றுச்சூழல், சுகாதாரம், நகர்ப்புற விவகாரங்கள், நிர்வாக கொள்கைகள் போன்ற பலவித அம்சங்கள் இப்படிப்பில் இடம்பெறுகின்றன.
யாருக்கு இந்தப் படிப்பு பொருந்தும்?
அடிப்படையில் இந்தப் படிப்பானது, அகில இந்திய சேவைகள் மற்றும் மத்திய சேவைப் பணிகளில் இருக்கும் நபர்களுக்காக துவக்கப்பட்டது(அதாவது, தங்களது பணிக்காலத்தின் மத்தியில் இருப்பவர்கள்). பொதுவாக, அவர்கள் அரசு செலவிலேயே பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு, இந்தப் படிப்பானது தனியார் துறையைச் சேர்ந்த நபர்களுக்கும் திறந்துவிடப்பட்டது.
உள்கட்டமைப்பு, டெலிகாம், தகவல்தொடர்பு, வங்கியியல் மற்றும் சுகாதாரம், ஒழுங்குமுறை ஏஜென்சிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் தனியார்துறை அதிகாரிகள் மற்றும் இத்துறையில் சோபிக்க விரும்பும் மாணவர்களும் இப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிப்பை தேர்வுசெய்யும்போது கவனிக்க வேண்டியவை
* உங்களுடைய பின்னணி நன்கு மதிப்பிட்டு, இந்தப் படிப்பானது, உங்களது அறிவு மற்றும் திறன் வளர்ச்சிக்கு இப்படிப்பு எவ்வகையில் உதவுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
* உங்களுக்கு ஏற்கனவே, பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மை துறையில் அனுபவம் இருப்பின், இப்படிப்பின் மூலம், நீங்கள் மிகச்சிறப்பான வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள்.
* இந்தப் படிப்பை வெளிநாட்டில் படிப்பது மிகச் சிறந்த அனுபவங்களையும், வாய்ப்புகளையும் வழங்கும் என்றாலும், அதற்கான செலவு, உள்நாட்டோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* பிற்காலத்தில் சிறந்த பணி வாய்ப்புகளைப் பெற, சிறிது முன்அனுபவம் பெற்றிருப்பது மிகவும் உதவும்.
வேலை வாய்ப்புகள்
உங்களின் பின்னணி மற்றும் திறமைகள் அடிப்படையில், உங்களுக்கு பல பணிவாய்ப்புகள் காத்துக்கொண்டுள்ளன. ஆரம்பநிலை பணிகள் தொடங்கி, அனுபவநிலை பணியான ஆலோசகர் பணிவரை பலநிலை பணி வாய்ப்புகள் உள்ளன. UNDP, UNICEF,  Asian Development Bank, African Development Bank Group போன்ற பலவித பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும், Ford Foundation, Oxfam, CARE போன்ற சர்வதேச நன்கொடை நிறுவனங்களிலும் நிறைய பணிவாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பானது, கார்பரேட் நிறுவனங்களின் அபரிமித தேவைகளை நிறைவு செய்கிறது. இத்துறை தொடர்பாக, அடி முதல் நுனி வரை அறிவுபெற்ற நபர்களுக்கு, எங்கு சென்றாலும் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கும் என்றால் அது மிகையில்லை.
இதுதொடர்பான படிப்பை வழங்கும் முக்கிய இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்பின் பெயர்கள்
Key word: மேலாண்மை படிப்பில்,கல்வி

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads