Pages

Saturday, 9 June 2012

இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பம்

திண்டுக்கல்:
 பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையை அரசு வழங்குகிறது. இதனைப் பெறுவதற்கு தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன், மாவட்ட கல்வித்துறைக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், கட்டண விபரம் போன்றவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய கல்லூரிகள், ஏற்கனவே செயல்படும் கல்லூரிகளில் புது பாடப்பிரிவுகளை பொறுத்த வரை, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொண்டு, பதிவு எண்ணை பெற்றுக் கொள்ளலாம். உதவித் தொகை பெற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த, அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads