Pages

Thursday, 28 June 2012

மாநகரில் சூரியஒளி மின்திட்டங்கள்

கோவை மாநகரில் சூரியஒளி மின்திட்டங்கள் அமல்படுத்த முடிவு:

கோவை: கோவை மாநகராட்சி சார்பில், மாந கரில் சூரியஒளி மின்திட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பாக தொழில்நுட்ப
 வல்லுனர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் பொன்னுசாமி தலைமை தாங்கினார்.
இதில், கோவை மாநக ரில் மின்தேவையை பூர்த்திசெய்ய சூரிய ஒளி திட்டங்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதில் என்னென்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
இதுபற்றி கமிஷனர் பொன்னுசாமி பேசியதாவது:
டீசல் ஜெனரேட்டர் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்து க்கான செலவு, சூரியஒளி மூலம் பெற ப்படும் மின்சாரத்தைவிட அதிகம் என்பதால் மக்கள் இத்திட்டத்தை அதிகம் பயன்படுத்த முன்வருவார்கள்.
இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவை மாநகராட்சியில் நகர அளவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சோலார் திட்டம் குறித்த பரவலான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசிடமிருந்து கிடைக்கும் மானியத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எந்தெந்த பகுதியில் எந்தெந்த அளவு சூரியஒளி திட்டத்தை அமல்படுத்துவது, இதற்கு ஆகும் செலவினங்கள் எவ்வளவு, அரசின் மானியம் எவ்வ ளவு என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய இறுதி அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்ப டும்.தேவையான அளவு நிதி பெற்று விரைவில் இத்திட்டம் அமல்படுத்தப் படும்.
இவ்வாறு கமிஷனர் பொன்னுசாமி பேசினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல், நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி, மாநகராட்சி தலைமை பொறியாளர் கருணாகரன், நிர்வாக பொறியாளர்கள் சுகுமார், கணேஷ்வரன், சிஐடி கல்லூரி பேராசிரியர் சந்திரசேகரன், இக்லி மேலாளர் ரஞ்சன், ஆஸிஸ்வர்மா, செல்லகிருஷ்ணன், ராக் அமைப்பு செயலாளர் ரவீந்திரன் உள்பட பலரும் பேசினர்.
Key word:சூரியஒளி மின்திட்டங்கள்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads