Pages

Sunday, 10 June 2012

தேரோட்டம்

திட்டக்குடி அருகே சுமங்கலி பெண்கள் மட்டுமே இழுத்து வந்த தேரோட்டம்.


திட்டக்குடியை அடுத்துள்ள பெறுமுளையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை ஊர்மக்கள் 10 தினங்கள் கொண்டாடுவது வழக்கம். 7-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும்.


இந்த தேரை சுமங்கலி பெண்களே இழுத்து செல்வது வழக்கம். அதன்படி 7-ம் திருநாளில் சுமங்கலி பெண்கள் கோயில் வளாகத்தில் குழுமி ஊருணி பொங்கலிட்டு நாடு நலம் பெறவேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து அலகுகுத்தி தேர் ஓடும் தெருககள் வழியாக வந்து பிராத்தனை நேர்த்தி செய்தனர்.   அதைத்தொடர்ந்து சுமங்கலி பெண்கள் வழக்கம் போல் வெடி மேளதாளங்களுடன் அனைத்து தெருக்கள் வழியாகவும் தேரினை இழுத்து வந்தனர்.

வழிநெடுக பக்தர்கள் திரண்டு நின்று வீடுதோறும் தேங்காய் உடைத்தும் தீபாரதனை செய்தும் வழிபாடு செய்தனர். தேரினை இழுத்து வந்த சுமங்கலி பெண்களின் பாதங்களில் நீர் ஊற்றி வழிப்பட்டனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads