சைதை துரைசாமியின் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையம் தமிழகம் முழுவதும் நுழைவுத் தேர்வுகளை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சிகளை அளித்து வருகிறது.
2013-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வுக்கு 10 மாத கால இலவச பயிற்சி வகுப்புகளை மனிதநேய கட்டணமில்லா கல்வியகம் நடத்த உள்ளது. பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது. இதில் பயிற்சி பெற தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களை தேர்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் முக்கியமாக 12 மாவட்ட தலைநகரங்களில் மனிதநேயம் பயிற்சி மையம் நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.
நுழைவுத் தேர்வு சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில் நடத்தப்படும். பிற மாவட்டங்களிலும் தேர்வு எழுதலாம்.
நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும். நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி, பாடத்திட்டம் ஆகியவற்றை மனிதநேய இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் http://www.saidais.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இணையதள பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாளாகும். ஜூலை 5-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற வேண்டும். 1 1
0 கருத்துக்கள்0 இமெயில் பிரதி தனித்தன்மை பாதுகாப்பு | எங்களைப்பற்றி | தொடர்புகொள்ள | ஆலோசனைகள் | வலைத்தள தொகுப்பு காப்புரிமை 2012, © Malar Publications Ltd. | Powered by VPF

No comments:
Post a Comment