டி.என்.பி.எஸ்.சி. மூலம் இந்தாண்டு 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்: தேர்வாணைய தலைவர் நட்ராஜ் தகவல் நெல்லை தச்சநல்லூரில் வேதிக் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. விழாவில் தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் நட்ராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பள்ளியை திறந்து வைத்தார் .
விவசாய துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கமிஷனர் கருணாசாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் செந்தில்பிரகாஷ் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் ஸ்ரீவித்யா, ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி, நிர்வாக அதிகாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் அரசு தேர் வாணைய தலைவர் நடராஜ் பேசியதாவது:-
மக்களிடையே பிரச்சினைகள் வராமல் இருக்க கல்வி முக்கியம். சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை அகற்ற கல்வி அவசியம் என்று பெருந்தலைவர் காமராஜர் கூறினார். பெற்ற கல்வி அனைவருக்கும் பயனுடையதாக இருக்க வேண்டும். மாணவர்களிடையே கேள்வி கேட்கும் திறனை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 4 தேர்வு மூலம் 10 ஆயிரத்து 800 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 11 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்தாண்டு மட்டும் டி.என்.பி.எஸ்.சி.மூலம் 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பவுள்ளோம்
- குரூப்-2வில் 3 ஆயிரம் பணியிடங்களும், கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் புரிந்து கொண்டு படித்து எழுத வேண்டும். நல்ல மனிதர்கள், நல்ல பண்பாளர்கள், ஒழுக்க முள்ளவர்கள், ஊழலற்றவர்கள் வரவேண்டும் என்பதற்காக டி.என்.பி.எஸ்.சியில் வெளிப்படையான நிர்வாகம் நடந்து வருகிறது இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment