திருமணம் முடிந்த 60 நாளில் அதை பதிவு செய்வதை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணத்தை 2 மாதத்தில் பதிவு செய்ய தவறினால், அந்த ஜோடிக்கு ரூ.10,000 அபராதம்
விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருமணப் பதிவுகளை எளிதாக்க வேண்டும் என்று டெல்லி மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து திருமணப் பதிவுக்கான புதிய சட்ட திருத்த மசோதாவை அரசு தயாரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த ஆலோசனைகளின் பேரில் திருமண பதிவுகள், இந்த மசோதா மூலம் மிக எளிதாகப்பட்டுள்ளது. இதன்படி, திருமணப் பதிவுக்காக, ரிஜிஸ்டர் அலுவலகத்துக்கு இனி ஜோடியாக வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணவன், மனைவியில் ஒருவர் மட்டுமே வந்தால் போதும். மேலும், திடீர் உடல்நலக் குறைவு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களின்போது தங்கள் பெற்றோரையே பதிவுக்காக மணமக்கள் அனுப்பி வைக்கலாம். ஆனால், புதிய மசோதாவின்படி, டெல்லியில் நடக்கும் அனைத்து திருமணங்களும், டெல்லியைச் சேர்ந்தவர்களின் திருமணங்களும் பதிவு செய்வது கட்டாயமாகிறது.
கடந்த ஆண்டே இந்த மசோதா தயாரிக்கப்பட்டு விட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மசோதாவில் உள்ள விஷயங்களை எளிதாக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதன்படி, மசோதாவில் பல்வேறு விஷயங்கள் மிக எளிமையாக்கப்பட்டுள்ளன. திருமணம் முடிந்த 60 நாளில் அதை பதிவு செய்ய வேண்டும். தவறுவோருக்கு ஸி10,000 அபராதம் விதிக் கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய மசோதாவின்படி, இந்து திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் உள்ளிட்ட எந்த சட்டத்தின் கீழும் திருமணங்களை பதிவு செய்துக் கொள்ள முடியும். டெல்லியில் வசிப்பவர்கள் வெளிநாட்டில் சென்று திருமணம் செய்துக் கொண்டாலும், அதை பதிவு செய்வது கட்டாயமாகிறது. இதனால் டெல்லியைச் சேர்ந்த பெண்கள், வெளிநாட்டில் திருமணம் செய்துக் கொண்டாலும், அவர்களுக்குரிய உரிமை களை சட்ட ரீதியாக பெற முடியும். அதற்காகவே இப்பிரிவு புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஏ.கே.வாலியா பேரவையில் அறிமுகம் செய்தார். பேரவையில் மசோதா நிறைவேற்றப்ப ட்ட பின்னர் அது மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெறப் பட்டு சட்டமாக்கப்படும்.

No comments:
Post a Comment