பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் குறைகிறது:
இந்த வார இறுதியில் அறிவிப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கணிசமான அளவுக்கு உயர்ந்ததால் இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.7.54 உயர்த்தப்பட்டது.
12 சதவீதம் விலை உயர்த்தப்பட்டதால் நாடெங்கும் எதிர்ப்பு ஏற்பட்டது. பெட்ரோல் விலையை குறைக்கக் கோரி ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் போராட்டம் நடத்தின.
பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு பேரலுக்கு 124.42 டாலரில் இருந்து 115.81 டாலராக குறைந்தது.
இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கடந்த 2-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து இறங்கியது. இதே நிலை நீடித்தால் பெட்ரோல் விலையை மேலும் குறைக்க முடியும் என்று மத்திய அரசு கூறியது.
மத்திய அரசு எதிர் பார்த்தது போலவே, தற்போது சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணை விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி கச்சா எண்ணை ஒரு பேரல் விலை 107.99 டாலராக இருந்தது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. எனவே பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் 2 ரூபாய் குறைக்க சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியம் அமைச்சக அதிகாரிகளும், எண்ணை நிறுவன அதிகாரிகளும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பெட்ரோல் விலை குறைவது உறுதியாகி விட்டது. இந்த வார இறுதியில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment