டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு
தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களும், அதிகாரிகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதற்காக குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30-ம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 9 லட்சம் பட்டதாரிகள் எழுதினார்கள்.
பழைய தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வு முடிவு மட்டும் வெளியாகாமல் இருந்தது. தேர்வு எழுதியவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறியுள்ளார். தேர்வு முடிவுகளை சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலக அறிவிப்பு பலகையிலும், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment