Pages

Monday, 14 May 2012

பகிர்ந்தால் பணம் தரும் இணையதளம்


ஸ்புக், ட்விட்டர், கூகுள்+ தளங்களில் பகிர்ந்தால் பணம் தரும் இணையதளம்
சமூக தளங்களின் வளர்ச்சியை பார்க்கையில் அபாரமாக உள்ளது. நாளுக்கு நாள் புதிய நண்பர்கள், சேட்டிங், வீடியோ காலிங் இப்படி பல வசதிகள் இருப்பதால் சமூக தளங்கள் மிக வேகமாக வளர்ந்து உள்ளது. சமூக தளங்கள் நேரத்தை வீணடிக்கும் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது என்று பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சமூக தளங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்க முடியும் என்கிறது ஒரு தளம். Have you seen என்ற இந்த தளம் சமூக தளங்கள் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்று வழிகாட்டுகிறது.
         இணையத்தில் பல வகையான பயனுள்ள பொருட்களை குறைந்த விலையில் ஆன்லைனில் வாங்க முடியும். அதற்கான நிறைய தளங்கள் இருந்தாலும் பல பேருக்கு அதை கண்டறிவதில் சில சிரமங்கள் உள்ளது. உங்களிடம் யாராவது ஒரு பொருளை பற்றி கேட்டு இருக்கலாம் அது போன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட பொருளின் லிங்கை சமூக தளங்களில் உங்கள் கணக்கில் பகிர்ந்து நீங்கள் பகிரும் லிங்கின் மூலமாக யாராவது அந்த பொருளை வாங்கினால் குறிப்பிட்ட ஒரு தொகையை கமிஷனாக உங்களுக்கு வழங்குவார்கள்.
         முதலில் இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். அவ்வளவு தான் இந்த தளத்தின் உள்ள பொருட்களின் URL அல்லது நேரடியான லிங்கை உங்களின் பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர் தளங்களில் பகிருங்கள். கணிசமான தொகையை கமிஷனாக பெற்றிடுங்கள். இந்த தளத்தில் முதலில் முதல் பகிர்தலுக்கு 5 பவுண்ட் உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள். பிறகு ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற மாதிரி கமிஷன் தொகைகள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 20 பவுண்ட் உங்கள் கணக்கில் சேர்ந்த உடன் தொகையை உங்களால் பெற இயலும். பேபால் வங்கியின் மூலம் பணம் பரிமாற்றம் செய்கிறார்கள்.  கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
தளத்தின் லிங்க் - click here
டிஸ்கி: இந்த தளத்தை நான் இதற்க்கு முன்னர் உபயோகபடுத்தியதில்லை. ஆகவே இதன் நம்பக தன்மையை பற்றி இப்பொழுது என்னால் எதுவும் கூற முடியாது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads