Pages

Thursday, 17 May 2012

கம்யூட்டர் மானிட்டர்


கணினி பொருள்களைத் தயாரித்து வழங்கும் சிம்ட்ரோனிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் பல்வேறு வகையான 5 எல்இடி பேக்லிட் மானிட்டர்களை களமிறக்கி இருக்கிறது. இந்த மானிட்டர்கள் 15.6, 18.5, 19 மற்றும் 21.5 இன்ச் ஆகிய அளவுகளில் வருகின்றன.
இந்த மானிட்டர்கள் சிம்ட்ரோனிக்சின் ரூர்கீ பட்டறையில் தயாரிக்கப்பட்டாலும் இவை முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன
 என்ற விளம்பரத்தோடு இந்த மானிட்டர்கள் வருகின்றன.
  • இந்த மானிட்டர்களின் முக்கிய சிறப்பு அம்சம் இவை குறைவான மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். அதே நேரத்தில் உயர் மின் அழுத்தம் ஏற்படும் போது அதைத் தாங்கிக் கொள்வதற்கான பாதுகாப்பு வசதிகளும் இந்த மானிட்டர்களில் உள்ளன.
  • 2.1 இன்ச் மானிட்டர் 1920×1080 பிக்சல் ரிசலூசனையும்,
  • 19 இன்ச் மானிட்டர் 1440×900 பிக்சல் ரிசலூசனையும் கொண்டிருக்கின்றன.
  • அதே நேரத்தில் 18.5 மற்றும் 15.5 இன்ச் மானிட்டர்கள் 1366×768 பிக்சல் ரிசலூசனைக் கொண்டிருக்கின்றன.
  • இந்த மானிட்டர்கள் அனைத்தும் விஜிஎ போர்ட்டுகளை வழங்குகின்றன. ஆனால் ஒரு சில டிவிஐ-டி மற்றும் எச்டிஎம்ஐ வசதிகளை வழங்குகின்றன. இந்த எல்இடி பேக்லிட் மானிட்டர்கள் குறைந்த மின் திறனையே பயன்படுத்துகின்றன.
  • இந்த மானிட்டர்களின் விலை ரூ.6000லிருந்து ரூ.13000க்குள் இருக்கின்றன. மேலும் இவை 3 வருட உத்திரவாதத்துடன் வருகின்றன.

Key word: computer, monitor, simmtronics, கம்யூட்டர், சிம்ட்ரோனிக்ஸ், மானிட்டர்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads