Pages

Wednesday, 2 May 2012

தலைமுடிக்கு வந்த ஆபத்து!

              நம் முன்னோர்கள் தலையைச் சுத்தம் செய்வதற்கு சீயக்காய் தூள்தான் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்தி வந்தபோதெல்லாம் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. எப்போது நவ நாகரிகப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்களோ அப்போது வந்தது தலைமுடிக்கு ஆபத்து!
 தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை ஏதேனுமொரு ஷாம்பு விளம்பரம்தான் வருகிறது!
             இன்றைய நவநாகரிக உலகில் எல்லோரும் தலைக்கு ஷாம்புதான் பயன்படுத்துகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக அழகு சாதனப் பொருள்கள் மீதான மக்களின் மோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. அவற்றால் மக்கள் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். இதனால், ஏற்படக்கூடிய நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்று ஓர் ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.
             இதுமட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ஷாம்புகளைக் காட்டிலும் தற்போது தயாரிக்கப்படும் அதிநவீன ஷாம்புகளில் நறுமணத்திற்காகவும், அதிகம் நுரை வரவேண்டும் என்பதற்காகவும் அதிகமாக ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படுவதால், மக்களுக்கு வெகு விரைவில் தீமை உண்டாகிறது என்றும் தெரியவருகிறது.
             ஷாம்புவால் தலைக்கும் உடலுக்கும் தீமை ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது இன்று நேற்றல்ல, கடந்த 1.3.1993 அன்றே அறிவியல் நிபுணர்களாலும் மருத்துவர்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்றளவும் நாம் ஷாம்புவை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.
            தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பு கூந்தலில் உள்ள அழுக்கைப் போக்குவதற்கும் கூந்தல் பளபளப்பாக இருப்பதற்கும் உதவுகிறது என்று அனைவரும் நம்புகின்றனர். ஆனால், ஷாம்புவால் கூந்தலில் உள்ள அழுக்கு நீங்குவதில்லை என்றும், கூந்தல் பளபளப்புடன் பொலிவுறுவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாம்புவால் கெடுதல்தான் மிகுதியே தவிர, நன்மை துளிக்கூட இல்லை என்றது அந்த ஆய்வு.
          உடுசான் கான்சூமர் (மற்ன்ள்ஹய் ஓர்ய்ள்ன்ம்ங்ங்ழ்) எனும் மலேசிய பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி பிரபல ஷாம்புகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் பலவற்றிலும் நைட்ரோசமைன் (சண்ற்ழ்ர்ள்ண்ம்ண்ய்ங்) எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என சோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனப் பொருள் நிறைந்த ஷாம்புவை நாம் தேய்த்துக் குளிக்கும்போது, கூந்தலுக்குப் பாதிப்பு, முடி உதிர்தல், தோல் வியாதிகள் போன்றவையும் ஏற்படுகின்றன.
         மேலும், இதுபற்றி விரிவான ஆய்வுகளில் ஈடுபட்ட ஐப்பானிய அறிஞர்கள், சோதனைச் சாலைகளில் எலிகளுக்கு அவற்றின் உடலின் மீதிருந்த முடியினை நீக்கிவிட்டு, வெறும் தோலில் ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் பொருள்களைத் தொடர்ந்து பத்து நாள்களுக்குத் தடவி வந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த எலிகளின் உடலில் அழற்சி ஏற்பட்டதுடன், அவ்விடங்களில் மீண்டும் முடி முளைப்பதும் நின்றுபோனது.
        இவ் வேதிப்பொருள்களால் கர்ப்பத்திலிருக்கும் கருவிற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தச் சோதனையும் எலிகளை வைத்தே நிகழ்த்தியுள்ளனர். இதன் காரணமாக கர்ப்பத்தில் இருக்கும் சில எலிக் குஞ்சுகளை ஆராய்ந்தபோது, அவற்றில் சிலவற்றிற்கு முதுகெலும்பில் பிளவு, அண்ணப் பிளவு (ட்ஹழ்ங் ப்ண்ல், ஸ்ரீங்ப்ச்ற் ல்ஹப்ஹற்ங்) போன்றவையும், உடல் உள்ளுறுப்பில் குறைகளுடனும் காணப்பட்டன.
       சிலவகை ஷாம்புகளில் பயன்படுத்தப்படும் என்டிலா (ச-க்ங்ப்ஹ) எனும் ஒரு வகை நைட்ரசோமைன் விலங்குகளுக்குப் புற்றுநோயை ஏற்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த என்டிலா எனும் வேதிப்பொருள் நேரடியாக ஷாம்புகளில் கலக்கப்படாவிட்டாலும், சில வேதிவினை நிகழ்வுக்குப் பின்னர் உடலுக்கு உள்ளேயோ, வெளியிலோ தானாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதையும் ஆராய்ச்சி முடிவில் கூறியுள்ளனர்.
      பொதுவாக வேதியல் அமைன்கள் (ஹம்ண்ய்ங்ள்) ஏதாவது ஒரு நைட்ரோசேட்டின் ஏஜெண்டுடன் (ய்ண்ற்ழ்ர்ள்ஹற்ண்ய்ஞ் ஹஞ்ங்ய்ற்) தொடர்பு கொள்ளும்போது மைட்ரோசோமைன்கள் ஏற்படுகின்றன.
       நாம் இன்றைக்குப் பயன்படுத்தும் ஏராளமான அழகு சாதனப் பொருள்களில் வேதிப் பொருள்களான டிரை-எதனாலமைன் மற்றும் டை-எதனாலமைன் போன்றவை கலந்துள்ளன. இவை உடலுக்கு உள்ளே நுழைந்த பின்னரோ அல்லது உடலுக்குள் நுழையும் முன்னரோ நைட்ரோசேட்டின் ஏஜெண்டுகளுடன் கலக்க நேர்ந்தால், என்டிலா வகை நைட்ரோசோமைன்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டி, டீ என அழைக்கப்படும் (பங்ஹ, ஈங்ஹ) இவ்விருவகை வேதிப் பொருள்களும் எளிதில் தோல் வழியாக உடலினுள் உட்கிரகிக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தை அடையும் தன்மை உடையது. எனவே, இவ்வகை வேதிப்பொருள்களைப் பயன்படுத்துவதில் பொதுமக்களிடம் கவனம் தேவை என "நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வுக்கழக' வெளியீடான "கன்சுயூமர் கான்பிரான்டேஷன்' (இர்ய்ள்ன்ம்ங்ழ் ஸ்ரீர்ய்ச்ழ்ர்ய்ற்ஹற்ண்ர்ய்) எனும் இதழ் எச்சரித்துள்ளது.
       ஒரு மனிதனின் முடியின் தன்மை அவனது பாரம்பரியம், வயது, சுகாதார நிலை போன்றவற்றினாலேயே மாறுபடுகிறது. நாம் உபயோகிக்கும் ஷாம்புகளால் உலர்ந்த கூந்தலில் ஈரப்பசையையோ, எண்ணெய்ப் பசை உடைய கூந்தல் போல பட்டுப்போல் மென்மையாகவோ மாற்ற இயலாது. சேதமடைந்த முடியைப் புதுப்பிக்கக்கூடிய தன்மை ஷாம்புகளால் இயலாது. ஏனென்றால், ஷாம்பு என்பது தண்ணீர், டிடெர்ஜெண்ட், எண்ணெய், வாசனைப் பொருள்கள் மற்றும் வேறு சில பொருள்கள் நிறைந்த கலவையே ஆகும். பாத்திரங்களையும், துணிகளையும் சுத்தப்படுத்தும் டிடெர்ஜெண்டுகளே ஷாம்புவில் (அதிகம்) கலக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொண்டால், ஷாம்பு உபயோகிப்பதைத் தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
      நம் தமிழர் பண்பாடு, கலாசாரம் வழிவழியாக நம் முன்னோர் கடைப்பிடித்த மரபுப்படி வந்தது. நம் பாட்டி வைத்தியத்துக்கு மிஞ்சிய வைத்தியம் கிடையாது என்பதை நாம் என்றைக்கு மறந்தோமோ, அன்றைக்கே நமக்கு ஆபத்தும் வர ஆரம்பித்துவிட்டது.
     சீயக்காய் குளியலை விட்டு ஷாம்பு குளியலுக்கு மாறியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது: நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புகளில் வரும் நுரைக்கும், கூந்தல் சுத்தப்படுத்தும் தன்மைக்கும் ஒரு சிறிதேனும் தொடர்பில்லை என்பதை!

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads