Pages

Tuesday, 31 December 2013

ராசியின் பலனைப் பெருக்கிடும் ராசி கணபதி வழிபாடு.


எல்லா காலங்களும் நல்லதாகவே அமைய வேண்டும். வெற்றி மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்  தங்கள் வாழ்வில்  தோல்வி என்று ஒருசமயம் வந்து விட்டால் அதைத் தாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள். எனக்கு ராசி இல்லை. நேரம் சரியாக இ ல்லை என்று புலம்புகிறார்கள்.
ஒருவரது காரியம் தொடங்கிய உடன் வெற்றியாவதும், சில காலங்களுக்கு இழுத்துக் கொண்டு நிற்பதும் அவரது ராசியின் பலன் என்றே சொல்ல  வேண்டும்.  அனைத்து வகையான மனிதர் களுக்கும் இப்படி ராசி சிறப்பாக அமைந்து விடுவதில்லை. எந்தத் தொழிலாக இருப்பினும் அதைத்  தொடங்கிய எஜமானருடைய  ராசி நிலை நன்றாக இருக்க வேண்டும். இந்நிலையை ராசி, யோகம், காலம், நேரம், அதிர்ஷ்டம் என்று பலவாறு கு றிப்பிடுகின்றனர்.

ஜாதகரீதியாக அப்படிப்பட்ட யோக காலத்தை நாமே வரவழைத்துக் கொள்ள இயலும். அதற்கு முத்தாய்ப்பாக வருவதுதான் ராசிகணேஷ் என்னும் ராசிகணபதி  வழிபாடு.நம்முடைய எண்ணங்களை எளிதில் ஈடேற்ற வேண்டும் என்பதால்தான் கணபதியின் கையில் உலக வடிவமான பூரண மோதகத்தைக் கொடுத் தார்கள்.
பன்னிரு ராசிக்காரர்களும் தங்கள் ராசியின் சக்தியை அதி கரித்துக் கொள்ள அவரவரது மூல மந்திரத்தை அறியும் முன்பு அதற்கு ஏற்றபடி உள்ள  கணபதி    வடிவத்தையும் அறியவேண்டும்.ஒருமுறை கணபதியிடம் சென்ற பன்னிரு ராசிகளும் தயங்கி நின்றன. தனது ஆவரண பீட எல்லைக்கு அவர்களை அழைத்த  கணபதி, 'உங்களுக்கு  என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.

‘‘மனித ஜீவன்களின் தசை மற்றும் புத்தி காலங்கள் வரும்போது நவகிரகங்களின் அசைவால் யோகம் மற்றும் அவயோக பலன்களை எங்களிடம்  ஏற்றி  விடுகிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் அல்லலுக்கு உள்ளாகிறோம். கணநாதா! இனிமேல் மனிதர்களின் ஜீவன கால பலபலன்களை இனம்  கண்டு பலன் கூற  எங்களைப் பயன்படுத்தவும், ஜோதிட பலன்களைக் கண்டு பிடிக்க எங்களைப் பயன்படுத்தி உரசல் செய்யவும் வேண்டாம். வேறு  வழிகளைப் பயன்படுத்திட  படைப்புக் கடவுளான தங்கள் மாமன் நான்முகனிடம் கூறிவிடுங்கள் சுவாமி!’’ என்றனர். மேலும் ‘‘மகாபாரதத்தையே  தங்களது தந்தத்தால் எழுதியவர் நீங்கள்.  வேறு ஒரு மார்க்கத்தைக் கூறுங்கள்’’ என வருந்திக் கேட்டனர்.

ஒரு புன்சிரிப்பை உதிர்த்த கணபதி ‘‘பன்னிரு சிறு குழந்தைகளே! என்ன இது சிறுபிள்ளைத் தனமான பேச்சு? ராசி என்ற பெயர்களை வைத்துள்ள  நீங்கள்  இல்லாவிட்டால் மக்களுக்கு ஜாதகம் ஏது, பலன்கள் ஏது, எதிர்காலக் கணக்குதான் ஏது? நீங்கள்தான் பன்னிரு கட்டங் களில் உள்ள  கிரஹசாரபலன்களை  அறிவிக்கும் தீர்க்கதரிசிகள். மனித ஜீவன்களின் சுப, அவயோகங்களை அடையாளம் கண்டு அவர்களை வாழவைக்க வேண் டியது உங்கள் ஒவ்வொருவரின்  கடமை,’’ என்று ஆறுதல் அளித்தார் கணபதி. பிறகு அவர்களிடம், ‘‘சரி, ஒரு கண நேரம் 12 பேரும் என் மேல்  ஐக்கியமாகி, புது சக்தி பெற்றுச் செல்லுங்கள்,’’  என்றார். உடனேயே அவை கணபதியின் அங்கங்களில் ஏறி அமர்ந்து கொண்டன.

இவ்வாறு அவர்கள் ஒன்றாய் அமர்ந்திட்ட உருவம் யோக கணபதியாக ஆயிற்று.சில கண நேரங்கள் கழித்து அவரது சக்தி வட்டத்தை விட்டு வெளிவந்த ராசிகள்  12 பேரும் அவரவர் ஸ்தானங்களுக்குச் சென்றபோது ஒரு  மனிதனுக்கு வாழ்வில் அவரவர் முன் ஜன்ம புண்ணிய கணக்குப்படி யோகங்கள் பெற வழிகாட்ட  ஆரம்பித்தன. பன்னிரு ராசியினரும் தம் வாழ்வில் யோகங்களை அடைந்து வீடு, வியாபாரம், தொழிலில் மிகப்பெரிய சாதனை பெற்று வாழ்ந்திட ஒன்பது   மலர்கள், முஷ்டி மோதகம், வடை, மஞ்சள் சாதம் வைத்து சுக்ல சதுர்த்தி, சனி, செவ்வாய்க்கிழமைகளில் வழிபடல் வேண்டும்.

யோக கணபதி த்யானம்

யோகாரூடோ யோக பட்டாபிராமோ
பாலார்க்காப: ச இந்த்ர நீலாம் சுகாட்ய:
பாசே க்ஷவக்ஷான் யோக தண்டம் ததாநோ
பாயாந் நித்யம் யோக விக்நேச் வரோ நமஹ

ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் பொதுவான இந்த யோக கணபதி தியானத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வரலாம்.

ஒவ்வொரு ராசிக்கும் உரிய துதிகள்

மேஷம்: இவர்கள் பாலகணபதி மூர்த்தியை, ‘கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்’ என்ற மந்திரத் தை 11 முறை  கூறி வன்னி இலைகளால் அர்ச்சித்து வழிபட நற்பலன்களை அடையலாம்.

ரிஷபம்: இவர்கள், ‘நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்’ என்ற துதியைக் கூறி வில்வத் தளங்களால் பக்தி  கணபதியை அர்ச்சனை செய்து வரலாம்.

மிதுனம்: இவர்கள் ‘ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே’ எனும்  மந்திரம் சொல்லி செவ்வரளி மலர்களைக் கொண்டு சக்தி கணபதியை  வழிபடலாம்.

கடகம்: இவர்கள் மருக்கொழுந்தால் சித்திகணபதியை வணங்கி, ‘பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம:  ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல’ என்ற துதியைக் கூறி வழிபடலாம்.

சிம்மம்: இவர்கள் உச்சிஷ்ட கணபதி உருவைத் தியானம் செய்து அறுகம்புல்லால் ‘நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது  உச்சிஷ்ட நாமாயம்  கணேச பாது மே சக:’ என்ற மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம்.

கன்னி: இவர்கள் தடைகள் விலகிட க்ஷிப்ர கணபதியை மந்தார மலரால் ‘தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம்,  த்யாயேத்  க்ஷிப்ர கணாதிபம்’ என்ற மந்திரம் சொல்லி அர்ச்சித்து வழிபடலாம்.

துலாம்: இவர்கள் விஜயகணபதியை மனதில் எண்ணி வெள்ளெருக்கு இலைகளால் ‘பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம்  ரக்த வர்ணோ விநாயக:’ என்று சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம்.

விருச்சிகம்: இவர்கள் நிருத்த கணபதியை, ‘சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது  சிந்து  மௌலீம் பஜே:’ என்று சொல்லி, மாவிலங்க இலைகளால் அர்ச்சிக்கலாம்.

தனுசு: இவர்கள், புவனகணபதியை மஞ்சள் நிற மலர்களால் ‘சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய  கௌரம்‘ என்று  சொல்லி அர்ச்சிக்கலாம்.

மகரம்: இவர்கள் ஹரித்ரா கணபதியை நீல மலர்களால் ‘ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த  மேவ ச  பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்’ என்று சொல்லி வழிபடலாம்.

கும்பம்: இவர்கள் ஏகதந்த கணபதியை நாயுருவி இலைகளால் ‘லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த  மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே’ என்று சொல்லி வழிபடலாம்.

மீனம்: இவர்கள் சிருஷ்டி கணபதியை தும்பை மலர்களால் ‘பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி  தஷோ  விநாயக:’ என்று சொல்லி அர்ச்சிக்கலாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads