Pages

Wednesday, 13 November 2013

வாழைத்தண்டு சூப்!

தேவையான பொருட்கள்:
1.வாழைத்தண்டு,
2.இஞ்சி,
3.எலுமிச்சம்பழம்,
4.மிளகு,
5.சின்ன வெங்காயம்,
6.சீரகம் ,
7.எண்ணெய்,
8.உப்பு - தேவையான அளவு.
 செய்முறை:
வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தலம்.
 கீழ்கண்ட நோய்களுக்கு மருந்தாகும்.
 ஈரல் பாதிப்ப, கண் பார்வைக் கோளாறு,சிறுநீரக கற்கள்,காமாலை நோய். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.
வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும்.
 உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். 
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 
வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். 
தோல் நோய்களைக் குணப்படுத்தும். 
உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads