Pages

Saturday, 2 November 2013

தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலம் கொல்லிமலை!

கொல்லிமலை;தமிழ்நாட்டின் இன்னொரு கோடை வாசஸ்தலம். சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்காத இடம் என்பதால் இயற்கை எழிலுக்குக் குறைவில்லாத இடம். மலைப் பகுதிக்கே உரிய அருவிகள், வியூ பாயின்ட், கோயில்கள், படகுச்சவாரி என்று அழகான விஷயங்கள் கொல்லி மலையிலும் இருக்கின்றன. தங்குவதற்கு சிறிய ஓட்டல்களும் உணவகங்களும் உண்டு.
சிறப்பு!
1,000 - 1,300 மீட்டர் உயரத்தில், ஏறக்குறைய 280 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்குப் பசுமை போர்த்துகிறது கொல்லிமலை. 26 கி.மீ. மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள்!  ஆகாச கங்கா, மினி, மசிலா ஆகிய அருவிகள், அரபலீஸ்வரர் கோயில், தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை, சோளக்காடு உள்பட பல இடங்களை ரசிக்கலாம். அருவிகளில் குளிக்கலாம்... மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விடலாம்!
எப்போது செல்லலாம்?
ஆண்டு முழுவதும்.
எப்படிச் செல்வது?
நாமக்கல், சேலத்திலிருந்து பேருந்துகள் இருக்கின்றன.
எத்தனை நாள் தங்கலாம்?
2 முதல் 4 நாள்கள் (அருகில் இருப்பவர்கள் காலையில் சென்று மாலையில் திரும்பலாம்).
என்ன வாங்கலாம்?
பலா, பட்டர் ஃப்ரூட், அன்னாசி போன்ற பழங்கள், தேன், மூலிகைகள்.
அருகில் உள்ள இடங்கள்?
ஏற்காடு, மேட்டூர் அணை.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads