Pages

Tuesday, 12 November 2013

தொண்டை புண் குணமாக.

புளி நமது உணவு முறையில் ஒரு முக்கியமான பொருளாகும்.புளி இலையும் சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது. இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிகளை
அளிக்கிறது. புளி இலை ஒரு ஆயுர்வேத  மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது. இது செரிமானப் பிரச்சனை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும். 
புளி ஒரு மென்மையான மலமிளக்கியாக செயல்படுகிறது. புளியை மாலை வேளையில் சிறிது புளியாகாரம் செய்து சாப்பிடுவதனால் குடல்  இயக்கங்களை மேம்படுத்தலாம். புளி பித்த நீரால் ஏற்பட்ட கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. புளி இலைகளை  மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். புளி உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைத்து ஆரோக்கியமான  இதயத்தை ஊக்குவிப்பதற்கு உதவுகிறது.. 

நீர்த்த புளிசாறு தொண்டையில் ஏற்படும் புண்னை குணமாக்குகிறது. புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும்  புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது. வைட்டமின் சி  பற்றாக்குறையை புளிபழம் சரி செய்கிறது. முக்கியமாக தோலில் ஏற்படும் அழற்சியை குணமாக்கும். ஆக்ஸிஜனேற்றத்திற்கு நல்ல ஆதாரமாக  இருப்பது புளி, ஆதலால் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவி புரிகிறது. 

மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. புளியன் கொழுந்தை பக்குவபடுத்தி உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். புளியன்கொழுந்தை தேவையான  அளவு எடுத்து அத்துடன் பருப்பு சேர்த்து கூட்டு போன்று செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். புளியங்கொழுந்தை பச்சையாக சாப்பிட்டால் கண்  தொடர்பான பிணிகள் அகலும். பாண்டு ரோகத்தை குணமாக்கும் சக்தியும் உண்டு. உள்வெளி ரணங்களை குணமாக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads