நடிகர் : விஜய்
நடிகை : அமலாபால்
இயக்குனர் : ஏ.எல்.விஜய்
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவு : நீரவ் ஷா
மும்பை நகரின் தாராவி என்ற பகுதியில் தமிழர்களுக்கு பாதுகாவலராக சத்யராஜ். இதனால் அவரை சுட்டுக் கொல்ல மும்பையின் பிரபல தாதா திட்டமிடுகிறார். இந்த சண்டையில் சத்யராஜின் மனைவி ரேகா துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகிறார்.
இதனால் கோபம்கொண்ட சத்யராஜ் அந்த தாதாவை கொன்றுவிட்டு, இவர் தாதாவாக மாறுகிறார். தாயை இழந்த தனது ஐந்து வயது மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என அவரை நாசரிடம் கொடுத்து, ஆஸ்திரேலியோ அனுப்பி விடுகிறார். பின்னர் சத்யராஜ் 'அண்ணா'வாக தாராவி மக்களுக்கு தலைவனாகி தொண்டு செய்கிறார். தலைமறைவு வாழ்க்கையும் நடத்துகிறார்.
இந்நிலையில், சத்யராஜின் மகனான விஜய் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து பெரியவனாகிறார். அங்கு தண்ணீர் வியாபாரம் செய்யும் விஜய், ‘தமிழ் பசங்க’ என்ற பெயரில் டான்ஸ் ஸ்கூலும் நடத்தி வருகிறார். இங்கு டான்ஸ் கற்றுக்கொள்ள வரும் அமலாபால் விஜய் மீது காதல் கொள்கிறார்.
இவர்களுடைய திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் அமலாபாலின் தந்தையான சுரேஷ், விஜய்யின் அப்பாவை சந்தித்தே ஆகவேண்டும் என கூறி, ஆஸ்திரேலியாவிலிருந்து மூவரும் மும்பை கிளம்பி வருகின்றனர். மும்பை வரும் விஜய்-க்கு தன்னுடைய அப்பா பெரிய தாதா என்று தெரிய வருகிறது.
விஜய், தன்னுடைய காதலை அப்பாவிடம் கூறுகிறார். இவருக்காக சுரேஷிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் சத்யராஜை நோக்கி அமலாபாலும், சுரேஷும் துப்பாக்கியை நீட்டுகிறார்கள். அப்போதுதான், விஜய்-க்கு அவர்கள் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் என்று தெரியவருகிறது. சத்யராஜ் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் வழியில் குண்டு வைத்து கொல்லப்படுகிறார்.
இதையடுத்து விஜய் தாராவி மக்களுக்கு தலைவனாகி, தனது தந்தை விட்டுவிட்டுப் போன மக்கள் பணியை தொடர்ந்து செய்கிறார். இறுதியில், விஜய்-அமலாபால் காதல் என்னவாயிற்று? தன் தந்தையை கொன்றவர்களை விஜய் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
முற்பாதியில் விஜய், இளமை துள்ளலோடு பளிச்சிடுகிறார். பிற்பாதியில் தலைவனாக உருவெடுக்கும்போது, வெள்ளைச் சட்டை, ஜீன்ஸ் பேண்ட் என ரொம்பவும் இளமையாக இருக்கிறார். விஜய் அருவாளுடன் தரையில் கொத்தி கொண்டு இருக்கும் சீன் செம மாஸ்.
விஜய்யோடு சேர்ந்து சந்தானம் வழக்கம்போல் காமெடியில் கலக்கியிருக்கிறார். சாம் ஆண்டர்சன் வரும் 5 நிமிட காட்சி தியேட்டரையே கலகலக்க வைத்திருக்கிறது.
சத்யராஜ் அண்ணா வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார், அவர் நடிப்பு, முகபாவனை, பேசும் வசனங்கள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. முதல்பாதியில் அமலாபாலுக்கு நடிப்பதற்கு ஸ்கோப் இருந்தாலும், இரண்டாம் பாதியில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. இருப்பினும் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
முதல்பாதியை காமெடி, விறுவிறுப்பு என பரபரப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். பிற்பாதியில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், விஜய்-யின் அசாத்தியமான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையில் விஜய், அமலாபால் சேர்ந்து ஆடும் ரோப் டான்ஸ் பாடல், மற்றும் விஜய் பாடிய பாடலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.. விஜய்யும், அமலாபாலும் சேர்ந்து ஆடும் ரோப் டான்ஸ் பாடல் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் கண்கள் மும்பை மாநகரை அழகாக படம்பிடித்திருக்கிறது. இவரது திறமை பல காட்சிகளில் பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘தலைவா’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

No comments:
Post a Comment