Pages

Thursday, 30 May 2013

தோஷங்கள் போக்கும் செவ்வாய்க்கிழமை பூஜை.







ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 3 முதல் 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சை பழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்த விதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும். 
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும். 

செவ்வாய்க்கிழமை ராகு காலம் பத்ரகாளி அவதரித்த வேளை அதனால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழுமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தோஷங்களும் விலகும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads