Pages

Wednesday 22 May 2013

பிரதோஷ விரதமும், பலன்களும்;


சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண் ணியத்தை பெறு கிறார்கள். ஏழ்மை  ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.


நாள் : தேய்பிறை, வளர்பிறை, திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதல் இந்த விரதத்தை தொடங்கலாம். அதன் பிறகு  வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.

பிரதோஷ வழிபாடு பலன்:
ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் - நல்எண்ணம், நல்அருள் தரும்
செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
புதன் பிரதோஷம் - நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
சனிப்பிரதோஷம் - அனைத்து துன்பமும் விலகும்


 பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்: 
1. பால் நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் பல வளமும் உண்டாகும்
3. தேன் இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் செல்வம் பெருகும்
6. நெய் முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் நல்ல மக்கட்பேறு கிட்டும்
8. சர்க்கரை எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் சுகவாழ்வு
10. சந்தனம் சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் தெய்வ தரிசனம் கிட்டும்

பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். பாவங்கள் நீங்கும்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads