Pages

Friday, 10 May 2013

சென்னை பல்கலை, சூரிய மின் சக்தி மூலம், இயங்க உள்ளது.

சென்னை பல்கலை, சூரிய மின்சக்தியில் இயங்க உள்ளது. பல்கலையின் கீழ் உள்ள, நான்கு வளாகங்களிலும், இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

நாட்டின் பழமையான பல்கலைகளில், சென்னை பல்கலையும் ஒன்று. லண்டன் பல்கலைக் கழகத்தின் அமைப்பில், சென்னை பல்கலை, 1851ல் துவங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கு, கிண்டி, தரமணி, சேப்பாக்கம், மெரீனா என, நான்கு வளாகங்கள் செயல்படுகின்றன. இதில், 60க்கும் மேற்பட்ட துறைகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.
மெரினா கடற்கரை, அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர்., சமாதி உள்ளிட்டவற்றை சுற்றி பார்க்க வருபவர்கள், வெளிநாட்டினர் உள்ளிட்டோர், சென்னை பல்கலையில் உள்ள, "செனட்' கட்டடத்தை, பார்வையிட்டு செல்கின்றனர்.

புகழ் பெற்ற கட்டட அமைப்பை கொண்ட, சென்னை பல்கலையில், சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தி செய்யும் கருவிகள், நிறுவப்பட உள்ளன. இப்பணியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மேற்கொள்ளும்.இதுகுறித்து, சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் கூறியதாவது:

மெரினா, சேப்பாக்கம், கிண்டி, தரமணி என நான்கு வளாகத்திலும், சூரிய சக்தி மின் உற்பத்தி கருவிகள் நிறுவப்படும். இப்பணிகளை, "டெடா' மேற்கொள்ளும். சென்னை பல்கலையில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் அலுவலகங்களில், சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆனால், ஆய்வகங்களில், இவ்வசதியை பயன்படுத்த முடியாது.

தற்போது, இதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில், ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். நான்கு வளாகங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தி கருவிகள், ஐந்து கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.இவ்வாறு தாண்டவன் கூறினார்.
 Dinamalar செய்தி.




No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads