Pages

Friday, 3 May 2013

செய்வினை தோஷம் போக வழிபாடுகள்.


செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை  போன்றவை  ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை  பாதிக்காது.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று  அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு  தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.

அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads