Pages

Friday, 26 April 2013

சொத்து பிரச்சினை தீர்க்கும் ஸ்ரீ கிராத மூர்த்தி.


கிராத மூர்த்தி கோயில் பெரும் சொத்து சண்டை
விரோதத்தைத் தீர்த்துவைக்கும் வென்று-அரளிப்பூ
அர்ச்சனை செய்து வெண் பொங்கல் அமுதமிட்டு
அர்ப்பணித்தால் நன்மைகள் ஆம்!

பாண்டவரில் ஒருவரான அர்ச்சுனன் அரிய சிவ தனுசினைப் பெற வேண்டி காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவத்தில் மகிழ்ந்து அவர் விரும்பிய வரங்களைத் தர வேடுவராய்க் காட்சியளித்த திருக்கோலம்- கிராத மூர்த்தி கோலமாகும்.

குடவாசல் அருகில் உள்ள கொள்ளம்புதூரில் இருக்கும் நம்பர் கோயிலில் இந்த மூர்த்தியை தரிசிக்கலாம். இவருக்கு வில்வ அர்ச்சனை செய்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் வெல்லும் பலம் நமக்கு கிடைக்கும். மிளகு அடை செய்து வழிபட்டால் சொத்து பிரச்சினைகள் தீரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads