Pages

Saturday, 9 March 2013

பங்குனி மாத மீன ராசி பலன்கள்.

காலநேரம் பார்க்காமல் கடமையில் கண்ணாக இருந்து கடினமாக உழைக்கும் நீங்கள், மனிதர்களை விட மனசாட்சிக்கு அதிக மரியாதை தருவீர்கள்.  18ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் சுக்கிரன் நுழைவதால் மனஇறுக்கங்கள் குறையும். பணவரவு  உண்டு. புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்களில் ஒருசிலர் உதவிகரமாக இருப்பார்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆனால், உங்கள் ராசிக்குள்ளேயே சூரியனும் செவ்வாயும் அமர்ந்திருப்பதால் நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்துவிடாதீர்கள்.

வாயுத் தொந்தரவுதான். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளால் சங்கடங்கள் வரும். தூக்கம் குறையும். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை கவனமாக இயக்கப் பாருங்கள். முதுகு, கால்  மற்றும் நகக்கண்ணில் அடிபட வாய்ப்பிருக்கிறது. அஷ்டமத்துச்சனி தொடர்வதால் வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் சண்டை வரும். கணவன்-மனை விக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். கைமாற்றாகவும் வெளியில் கடன் வாங்க வேண்டியது வரும்.

நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும்போது யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். கொஞ்சம் நாவடக்கத்துடன் செயல்படப்
பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முடிந்த வரை குறைத்துச் சாப்பிடுவது நல்லது. 2ல் கேது நீடிப்ப தால் கண் மற்றும் பல்வலி வரக்கூடும். பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கோபத்தில் எடுத்தெறிந்து யாரையும் பேசாதீர்கள். உங்கள் ராசிநா தன் குரு 3ல் தொடர்வதால் சாதாரண விஷயங்களைகூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டியது வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம்.

மாணவர்களே! நினைவாற்றல், அறிவுத் திறன் கூடும். கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கத் தான் செய்யும். சின்னச் சின்ன நஷ்டங்களும் ஏமாற்றங்களும் வரக்கூடும். வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் அலைச்சலும் இடமாற்றமும் வேலைச்சுமையும் ஒருபக்கம் இருந்தாலும் பழைய அதிகாரி உதவிகரமாக இருப்பார். சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் குறையும்.

கலைத்துறையினரே! உதாசீனப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

விவசாயிகளே! விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். திட்டமிட்டு எதையும் செய்ய  வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்: 
மார்ச் 15, 16, 18, 20, 21, 24, 25, 26, ஏப்ரல் 2, 3, 4, 5, 7, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்: 
மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் செலவினங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: 
காஞ்சி காமாட்சி அம்மனை தரிசியுங்கள். சாலையோரம் வாழும் சிறார்களுக்கு உதவி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads