Pages

Tuesday 5 February 2013

கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) தமிழ் தளங்களில்.


கூகிள் ஆட்சென்ஸ் (Google Adsense) தமிழ் தளங்களில் 

தற்போது கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு அதிகமாக கிடைக்கப்படுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை என்ற கவலை தளத்தில் adsense போட்டு காத்திருப்போர் எல்லோருக்குமே இருக்கும்.
தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு அதிகம் விளம்பரம் கிடைத்தால் தான் அவற்றை விளம்பரம் காண்பிக்கும் தளங்களுக்கு தரமுடியும். உதாரணமாக ஒருவர் "கல்யாணம்" எனும் வார்த்தையை யாரேனும் கூகிள் தேடலில் பயன்படுத்தினால் அவரது "திருமண தகவல்" இணைய தளம் காண்பிக்கப்பட வேண்டும் என விளம்பரம் கூகிளுக்கு கொடுத்திருப்பார். இதே போல நிறைய பேர் தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு adwords மூலம் வர்த்தகத்தை ஏற்படுத்தியிருந்தால் மட்டுமே கூகிளின் adsense அந்த மொழி பயன்படுத்தும் இணைய தளங்களில் கூகிள் விளம்பரங்களை பயன்படுத்த முன்வரும்.
கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு கிடைக்கவில்லை எனில் அதை வாங்க சில ஆங்கிலப்பதிவுகளைப் போ்ட்டுவிட்டு மறுபடியும் அனுமதி கேட்டால் அனுமதி கிடைத்துவிடும். ஆனால் அனுமதி கிடைத்துவிட்ட பின் அதில் விளம்பரங்கள் காட்டப்பட்டால் தான் ஏதாவது இலாபம் கிடைக்கும்.
அவ்வாறு விளம்பரங்கள் வரவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை. கூகிளின் மற்றொரு சேவையான கூகிள் Friend connect இதற்கு கைகொடுக்கிறது.
இது நம் தளத்தில் followers, global comments, rating, featured content, newsletters போன்ற பல சேவைகளை widget களாக வழங்குகிறது. இதனுடன் ஆட்சென்ஸை பார்வையாளரின் விருப்பத்திற்கேற்ப வழங்கும் சேவையும் உள்ளது. எனவே இந்த சேவை தளம் தமிழாக இருந்தாலும் பார்வையாளரைப் பொறுத்தும் அவரது இடத்தைப்பொறுத்தும் பல விளம்பரங்களைக் காண்பிக்கும்.
செய்ய வேண்டியது இது தான்
1. நீங்கள் கூகிளின் Friend Connect - http://www.google.com/friendconnect/ எனும் முகவரிக்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் ஆட்சென்ஸ் வைத்திருக்கும் அதே கணக்கின் மின்னஞ்சல் முகவரி மூலம் உள் செல்லுங்கள்.
2. இடது பக்கம் இருக்கும் add a new site என்பதில் இருந்து உங்கள் தளத்தை அல்லது வலைப்பூவை இணைத்துக்கொள்ளவும்.
3. இணைத்த பின் அதே இடது பட்டியலில் adsense என்று இருப்பதை சொடுக்கவும்.
4. இப்போது உங்களின் ஏற்கெனவே இருக்கும் ஆட்சென்ஸ் கணக்குடன் உடன் இணைக்கச்சொல்லும். இணைத்து விடவும்
5. இணைத்த பின், அதே பக்கத்தில் இருக்கும் ஆட்சென்ஸ் அளவுகளில் உங்களுக்குத்தேவையானவற்றையோ அல்லது ஏற்கெனவே ஆட்சென்ஸில் உருவாக்கி வைத்திருக்கும் அளவையோ தெரிவு செய்து புதிய விளம்பர நிரலைப்பெற்றுக்கொண்டு, அதை வலைப்பூவிலோ அல்லது தளத்திலோ பழையதற்குப்பதிலாகப் போட்டுவிட்டால் விளம்பரம் காட்டியளிக்கத்துவங்கும்.

1 comment:

  1. 2010 செய்தி. தற்போது Friend Connect வேலை செய்யவில்லை

    ReplyDelete

ADVERTISE HERE.

space for ads