நாவல் பழம் நீரிழிவு அனபர்களின் முதல் தர மருந்துணவு.
நாவல் பழம் சர்க்கரை வியாதி அன்பர்களுக்கு என்றே இறைவனால்
படைக்கப்பட்டது என்ற அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஈரலை சரி செய்யும் தன்மைகள் அதிகம் உள்ளது. வயலட் நிறப் பழம். மழைக் காலங்களில் கிடைக்கிறது. இதில் துவர்ப்பு சுவை அதிகம் இருக்கும். குளிர்ச்சி தன்மை மிக்கது.
100 கிராம் நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=78%
மாவுப்பொருள்=20%
புரதம்=0.7%
கொழுப்பு=0.1%
கால்சியம்=0.02%
பாஸ்பரஸ்=0.01%
இரும்புச்சத்து=1 யூனிட்
மற்றும் வைட்டமின் C, வைட்டமின் B, போலிக் அமிலம் உள்ளது.
மருத்துவக் குணங்கள்:
கல்லீரல், மண்ணீரல் வீக்கம், ஈரல் பிணிகள் சரி செய்யும்.
வயிற்றுவலி, சீதபேதி, சிறுநீரகக்கல் அடைப்பு சரியாகும்.
சர்க்கரை வியாதி அன்பர்கள் தினம் நாவல் சாறு அருந்த கசப்பான அவர்களின் வாழ்வு இனித்திடும்.
நாவல் கொட்டைச்சாறும் அற்புத பலன் தரும்.
குறிப்பு:
பாலும், நாவல் சாறும் கலக்கக் கூடாது.


No comments:
Post a Comment