Pages

Thursday, 14 February 2013

தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி.

ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி செய்து வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று. நன்கு நீந்திக் குளிப்பதால் கிராம மக்கள் இன்றும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். 

நகர மக்களில் வசதி படைத்தோர் நீச்சல் குளம் சென்று நீந்துகிறார்கள். நடுத்தர வர்க்கத்திற்கு இதுபோல் ஏதும் இல்லை. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே சமயத்தில் இயங்கக்கூடிய ஒரே உடற்பயற்சி நீச்சல் தான். 

மார்பு நீச்சல் அல்லது தவளை நீச்சல்: இது தோள்பட்டை, கழுத்து, கால்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும் நீச்சலாகும். 

விரைவு நீச்சல்: இடுப்புப்பகுதி தசைகளும், இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் உறுதியாகும். 

பின்நீச்சல்: கெண்டைக்கால் தசைகள், இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறும். 

வண்ணத்துப்பூச்சி நீச்சல்: இதனால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், முதுகுப் பக்கமுள்ள தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads