Pages

Sunday, 10 February 2013

காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி.



1980-90களில் காமெடியில் தமிழ் சினிமா ரசிகர்களை கலகலப்பாக்கியவர் கவுண்டமணி. இவருடன் சேர்ந்து செந்திலும் நடித்து அப்போது வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றன. இவருடைய காமெடிக்காகவே அப்படங்கள் அனைத்தும் ஹிட்டாகின என்றால் அது மிகையல்ல. பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து இவர் செய்யும் காமெடி இன்றளவும் தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.

அதன்பிறகு, வடிவேலு, விவேக் ஆகிய காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் நுழையவே, இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. இவர் கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு, வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டிலேயே முடங்கிவிட்டார்.

இருந்தாலும், தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேடிக் கொண்டிருந்த இவருக்கு தற்போது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் சாந்தனு நடிக்கும் ‘வாய்மை’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் கவுண்டமணி. இப்படத்தில் டாக்டர் பென்னி என்ற கதாபாத்திரத்தில் வருகிறாராம். டாக்டர் பணியை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் இவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி சிலர் வற்புறுத்துவார்களாம். அதற்கு இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் முழுநேர காமெடியாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ பானு நடிக்கிறார். அ.செந்தில்குமார் இயக்குகிறார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads