பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் விரைவான சாமி தரிசனத்துக்காக ரோப்கார் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒரு ரோப்காரில் இரும்பு வடக்கயிறு மாற்றம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 வின்ச்களில் தற்போது 2 மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வின்ச் ஸ்டேசனில் பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இயக்கப்பட்டு வரும் 2 வின்ச்சுகளில் மலைக்கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வதால் மேலும் கூடுதல் நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழைய இரும்பு வடக்கயிறு மூலம் ரோப்கார் பெட்டியில் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு ஏற்றிச் செல்கின்றனர். பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரோப்கார் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment