இன்று மாலை நடை திறப்பு :
சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. தரிசனத்துக்காக பக்தர்கள் பம்பையில் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாவருடம் கார்த்திகை மாதம் 1ம்தேதி முதல் மண்டல பூஜைகள் தொடங்கும். இந்த பூஜை நாளை தொடங்குகிறது. இதையொட்டி கோயில் நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரி மலை நடையை புதிய மேல்சாந்தி தாமோதரன் போற்றியும், மாளிகைபுரம் கோயில் நடையை உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியும் திறப்பார்கள். முன்னதாக அவர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சிகால பூஜை, புஷ்பாபிஷேகம் ஆகிய பூஜைகள் தொடங்கும். நெய் அபிஷேகமும் நாளை முதல் தொடங்கும். காலை 7.30 மணி முதல் 11.30 மணிவரை நெய் அபிஷேகமும் செய்ய வசதி செய்து தரப்பட்டுள்ளது.
தொடர்ந்து 41 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கும். இன்று நடை திறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பம்பையில் குவிந்தனர். நடைதிறப்புக்கு பிறகு பக்தர்கள் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கேரளா போலீஸ் தவிர ஒரு கம்பெனி மத்திய அதிவேக அதிரடிப்படை போலீசார், கமாண்டோ வீரர்கள், தனிப்பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியை கவனிப்பார்கள்.
Key word: சபரிமலை ஐயப்பன் கோயில்



No comments:
Post a Comment