நேரமில்லை இன்றைய பெண்களுக்கு. நிச்சயமான நாள் முதல், கல்யாணத்துக்கு முதல் நாள் வரை வேலை.... வேலை... வேலை! ரிசப்ஷனுக்கு சிலமணி நேரம் முன் பார்லருக்கு படையெடுப்பதும், உச்சி முதல் பாதம் வரையிலான அனைத்துப் பிரச்னைகளையும் சரியாக்கி, இன்ஸ்டன்ட்டாக அழகி அவதாரம் எடுக்கத்
துடிப்பதுமாக, இந்தத் தலைமுறை பெண்களுக்கு எல்லாவற்றிலும் அவசரம்! மணப்பெண் அலங்காரம் என்பது சில பல மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிடப்பட வேண்டியது. மணமேடையில் அவளது அழகு அத்தனை பேரையும் ஈர்க்க வேண்டுமென்றால், அவள் தரப்பிலிருந்து நிறைய மெனக்கெடல் தேவை.
‘‘ஐ.டி. கம்பெனிலயும், சாஃப்ட்வேர்லயும் வேலை பார்க்கிற பெண்களோட எண்ணிக்கை அதிகமாயிட்டு வருது. கல்யாணத்துக்கு முதல் நாள் வரைக்கும் வேலைக்குப் போறாங்க. ஏற்கனவே அவங்களோட வேலைப்பளு காரணமா, கண்களுக்கு அடியில கருவளையங்கள், முகம் முழுக்க பரு, தலையில பொடுகு, பருமன்... இப்படி பல பிரச்னைகளோட இருக்காங்க. இந்தக் கோலத்துல மண மேடையில உட்கார முடியுமா? குறைஞ்சது 3 மாசத்துலருந்தாவது அக்கறை எடுத்துக்கிட்டா, மணமேடையில தேவதை மாதிரித் தெரிவாங்க.
கல்யாண டயட்!
கல்யாணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே தொடங்க வேண்டும்... முகூர்த்த நாள் வரை தவறாமல் செய்தால், ஃபேஷியல் இல்லாமலே பளபளக்கும் உங்கள் முகமும் சருமமும்.
- முதல் வாரம் காலையில் வெறும் வயிற்றில் சர்க்கரை சேர்க்காத பப்பாளி ஜூஸ்.
- இரண்டாவது வாரம் சர்க்கரை சேர்க்காத கேரட் ஜூஸ்.
- மூன்றாவது வாரம் சர்க்கரை சேர்க்காத ஆப்பிள் ஜூஸ்.
- நான்காவது வாரம் சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ்.
- Keywoed:அழகு!

No comments:
Post a Comment