Pages

Saturday, 13 October 2012

நித்யானந்தா ஆசிரமத்தில் நடிகை கவுசல்யா!!!


ரஞ்சிதாவை தொடர்ந்து நடிகை கவுசல்யாவும் நித்யானந்தா ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். கவுசல்யா காலமெல்லாம் காதல் வாழ்க படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். பிரியமுடன், உன்னுடன், வானத்தைப் போல, மனதை திருடி விட்டாய், திருமலை, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்தார். கடந்த 3 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். 32 வயது ஆகிறது. கவுசல்யாவுக்கு தீராத முதுகுவலி இருந்தது. டாக்டர்களிடம் மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. 

நித்யானந்தா ஹிலீங் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். எனவே நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று ஹிலீங் சிகிச்சை பெற்றார். தற்போது முதுகுவலி பூரண குணமாகியுள்ளது. இதையடுத்து நித்யானந்தாவின் சீடரானார். அடிக்கடி பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

தற்போது ஆசிரமத்திலேயே பெரும்பான்மை நாட்கள் தங்க தொடங்கியுள்ளார். ஆசிரம பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். யோகா, தியானங்களிலும் பங்கேற்கிறார். கவுசல்யாவுக்கு ஆசிரமத்தில் முக்கிய பதவி கிடைக்கும் என பேசப்படுகிறது. நித்யானந்தாவின் முதல் நிலை சீடராக அவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads