Pages

Friday, 12 October 2012

நவராத்திரி தோன்றிய கதை.


ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்ல சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை
. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியின் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.

துர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.
Key word:நவராத்திரி தோன்றிய கதை.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads