பருப்பு சாதம்
தேவையானவை:
புழுங்கலரிசி - ஒரு கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியை நறுக்கிக்கொள்ளுங்கள்.
மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் வைத்து, கொதித்ததும் அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேகவிடுங்கள் (வேகும்போது தண்ணீர் போதவில்லை எனில், கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்). தண்ணீர் வற்றி, சாதமும் வெந்தபின் இறக்குங்கள்.
பிறகு, வாணலியில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள். நன்கு வதங்கியதும், (இஞ்சி, பூண்டு சேர்ப்பதானால், அவற்றையும் நசுக்கிச் சேர்த்து வதக்கி) தக்காளி சேருங்கள். தக்காளி வதங்கியதும் தேங்காய்ப்பூ சேர்த்து இறக்கி, சாதத்துடன் கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.
குறிப்பு:
குக்கரில் வைப்பதாக இருந்தால், 4 டம்ளர் தண்ணீரில் அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, 2 விசில் வந்தபின், ‘ஸிம்’மில் 5 நிமிடம் வைத்து இறக்கி, மற்ற பொருட்களை வதக்கிச் சேர்க்கவேண்டும்.
‘அரிசியும் பருப்பு சாதம்’ . எளிமையான இந்த உணவு, வயிற்றுக்குக் கெடுதல் செய்யாதது.

No comments:
Post a Comment