Pages

Thursday, 11 October 2012

இயற்கை எழில் கொஞ்சும் குட்டி மூணார்!!!!


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் மேகமலை வனஉயிரிண சரணாலயம் அமைந்துள்ளது.

இந்த மேகமலை வருவாய் கிராமத்தில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் ஹைவேவிஸ் மணலார், மேல் மணலார், வெண்ணியாறு, இரவங்களாறு, மகாராஜா மெட்டு உள்ளிட சுற்றுலா
இடங்கள் அமைந்துள்ளன. குட்டிமூணார் என்று அழைக்கப்படும் ஹைவேவிஸ் மலையின் இயற்கை அழகை ரசிக்க நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் பச்சைபசேல் என விழிகளுக்கு பசுமை விருந்து படைத்து வருகின்றன. ஹைவேவிஸ் செல்லும் வழியில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பு அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள், மனதையும் கண்களையும் ஒருசேர குளிர வைத்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
 சுற்றுலா பயணிகளுக்கு போதிய உணவு விடுதி ஓட்டல்கள் வசதி இல்லை. இதனால், அவர்கள் வரும் வழியில் சின்னமனூரில் இருந்து உணவுகள் வாங்கிக்கொண்டு சுற்றுலா செல்கின்றனர்.
Key word: குட்டி மூணார்,சுற்றுலாத் தலங்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads