தேவையானவை:-
வெண்டைக்காய் - 250 கி்ராம்
பச்சை மிளகாய் - 10 ரெண்டாக வகிர்ந்தது..
சின்ன வெங்காயம் - 15
வெள்ளைப் பூண்டு - 15 பல்
வர மிளகாய் - 2
அரிசி களைந்த தண்ணீர் - 4 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
கருவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:-
வெண்டைக்காய்களை கழுவி துடைத்து 1 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும்.
சின்ன வெங்காயம்., பூண்டை தோல் உரித்து ரெண்டாக குறுக்கில் நறுக்கவும். வரமிளகாயை ரெண்டாக கிள்ளி வைக்கவும். புளியை அரிசி களைந்த தண்ணீரில் ஊறப்போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம்., வெந்தயம்., வரமிளகாய் ., கருவேப்பிலை போடவும்.. பச்சை மிளகாய் போட்டு 1 நிமிடம் வதக்கி பின் வெண்டைக்காய்., சின்ன வெங்காயம் ., பூண்டு போடவும். 2 நிமிடம் நன்கு வதக்கி புளி கரைத்த தண்ணீரை ஊற்றவும். கொதி வந்ததும் மிதமான தீயில் 20 நிமிடம் வைத்து கெட்டியானதும் இறக்கி சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்..
குறிப்பு :-
அரிசி களைந்த தண்ணீர் இல்லாவிட்டால் 1/4 டேபிள் ஸ்பூன் அரிசி., 1 டீஸ்பூன் வெந்தயம்., 1/8 இஞ்ச் பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து போடவும்.
இது செட்டிநாடு ஸ்பெஷல் ஐட்டம்.. இதை வெண்டைக்காய் மற்றும் வேகவைத்த மொச்சையுடன் அல்லது வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் மாவடு இஞ்சி ., குடை மிளகாயுடன் அல்லது பலகாய் மண்டியாக செய்யலாம்..

No comments:
Post a Comment