தேவை:
சுண்டக்காய் - 1/2 கிலோ,
* மோர் - 2 லிட்டர்,
* உப்பு - 1 மேசைக்கரண்டி.
செய்முறை:
* சுண்டக்காயை தட்டி, விதை போக அலசவும்.
* கொதிக்கும் நீரில் போட்டு மூடி, 5 நிமிடம் கழித்து, நீரை வடித்து வைக்கவும்.
* மோரில் உப்பை கலந்து காயை மோரில் போட்டு ஊற வைக்கவும்.
* அடுத்த நாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காய வைக்கவும்.
* மோரையும் தனியே வெயிலில் வைக்கவும்.
* மாலையில் திரும்ப காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடி வைக்கவும்.
* மோர் வற்றும் வரை திரும்ப திரும்ப இதே போல் (4, 5, 6வது வரிகள் சொன்னது போல்) செய்யவும். (3 அல்லது 4 நாட்களில் மோர் முழுவதும் வற்றி விடும்).
* வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.
குறிப்பு:
வற்றலை குழம்பும் வைக்கலாம், நெய்யில் பொரித்து, பொடியாக்கி, சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம். குழந்தை பெற்றவர்களுக்கு இந்த வற்றல் பொடி மிகவும் நல்லது.
Key word:சுண்டக்காய் வற்றல்.

No comments:
Post a Comment