Pages

Wednesday, 12 September 2012

திரிஷா-ராணா காதல்



திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பது பற்றிய கிசுகிசுக்கள் வெளியாயின. ஆனால் இருவருமே அதை மறுத்துள்ளார்கள். நண்பர்களாகத்தான் பழகுகிறோம். காதல் இல்லை என்றனர். கடந்த வாரம் திரிஷாவுக்கும் ராணாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாயின.

நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்றும், திரிஷாவுக்கு ராணா விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார் என்றும் கூறப்பட்டது. இதையும் திரிஷா மறுத்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் அருகருகே நெருக்கமாக இருந்து காதல் தீவிரத்தை வெளிப்படுத்தினர், நண்பனின் பிறந்த நாளையொட்டி இந்த விருந்து நடந்தது.

நெருங்கிய தோழிகள் பலர் வந்திருந்தனர். இந்த விருந்துக்கு திரிஷாவும், ராணாவும் ஜோடியாக வந்தார்கள். தனியாக அருகருகே உட்கார்ந்து கொண்டார்கள். பல மணி நேரம் சிரித்து, சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

விருந்து முடியும் வரை அங்கே உட்கார்ந்து இருந்தார்கள். இருவரும் காதலிப்பதை உறுதிபடுத்துவதாக அது இருந்தது என்று கூறப்படுகிறது. திரிஷாவும், ராணாவும் பல வருடங்களாக நட்பாக பழகிவந்தனர். சமீபத்தில் தான் அது காதலாக மாறியது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads