சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை:
தென்னாட்டிலிருந்து காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று சங்கல்பம் செய்து, அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கடலில் மூழ்கி மணல் எடுத்து பின்னர் மூதாதையருக்கு சிரார்த்த காரியங்களை செய்து பிதுர் தர்ப்பணம் முடித்து, ராமநாத சுவாமி கோயிலில் உள்ள மற்ற 21 தீர்த்தத்திலும் நீராடி, ராமநாதசுவாமி தரிசனம் முடித்தபின்னர்.
அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலை பத்திரமாக பூஜை செய்து, காசி யாத்திரை ஆரம்பித்த பின்னர் முதலில் பிரயாகை-திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை கரைத்தபின்னர்,
காசி சென்று, கங்கையில் ஸ்நானம் செய்து, காசி விஸ்வேஸ்வரர், அன்னபூரணி, விசாலாட்சி மற்ற தெய்வங்களை தரிசித்து பிறகு கடைசியாக காலபைரவரை தரிசித்து ஆசி பெற்று விடை பெற்று,
பிறகு கயாவிற்கு சென்று மறைந்த மூதாதையர்களுக்கு சிரார்த்தங்களை செய்து மீண்டும் திரிவேணி சங்கமம் வந்து கங்கையில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு பின்னர் ராமேஸ்வரம் சென்று ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தான் காசி யாத்திரை பூர்த்தியாகும்.
சம்பிரதாயப்படி இப்படி தான் செய்யவேண்டும் இருந்தாலும் இன்றைய அவசர உலகத்தில் யாத்ரீகர்கள் செளகர்யத்தை உத்தேசித்து சிலவற்றை கடைபிடிக்க முடியவில்லை.
காசி பிரயாகை கயா யாத்திரை செல்ல முடிவேடுத்தபின்னர், சம்பிரதாயமாக எவ்வாறு செல்வது என்று புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் பார்த்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை அமைத்துக்கொண்டோம்,
சேலத்திலிருந்து காசி சென்றடைய 2000௦௦௦ கிலோ மீட்டர் பயணம் தான். முதலிலேயே ரயிலில் படுக்கை வசதி போக வர பதிவு செய்திருந்ததால் நிம்மதியாக சென்று வர முடிந்தது. சைவ சாப்பாடு ஆனதால் வழி பயணத்தில் சாப்பாட்டிற்கு சிறிது கஷ்ட்டப்பட வேண்டியதாகிவிட்டது பால், தயிர், லஸ்சி, மோர், பழம் என்று கிடைப்பதை சாப்பிட்டு சமாளித்தோம். நாற்ப்பது பயணிகளுடன் பயணித்த அனுபவம், இறை இன்பம் அனைத்தும் சுகானுபவமே.. அதை அனுபவத்தில்தான் உணர முடியும்.
காசி உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. காசி நகர் புனிதமான கங்கை கரையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது மோசல் சராய் ரயில் நிலையத்திலிருந்து 15 கி மீ தொலைவில் வாரணாசி ரயில் நிலையம் உள்ளது. காசி வாரணாசி (பனாரஸ்) அனைத்தும் ஒன்று தான் . அருகிலேயே உள்ளது .இவ்விரண்டு இடங்களிலும் ரயில் ஏறி இறங்கலாம் காசி ரயில் நிலையத்திலிருந்து விஸ்வநாதர் ஆலயம் 3 கி மீ தூரம் தான்.
வருணா ஆசி ஆகிய இரு நதிகளின் சங்கமத்தளம் ஆதலால் வாரணாசி என்று பெயர். ஜோதிலிங்க முக்தி தரும் தலங்களில் எழில் ஒன்று.
காசியில் செய்ய வேண்டிய புண்ணிய காரியங்கள் வருமாறு:-
* காசி யாத்திரை செல்லும்போது ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். காசியில் தானம் செய்தால் நல்ல கதியை அடைய முடியும்.
* காசியில் விரதம் இருப்பவர்களுக்கு உணவு அளித்து பூஜிக்க வேண்டும். இதனால் சவுதராமணி யாகம் செய்த பலனை அடைகின்றனர்.
* காசியில் தானம் செய்த பிறகு சிவபக்தியுடன் தானம் செய்து ஒரு நாள் விரதம் இருந்தால், நூறு வருடங்கள் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
* காசியில் சிவபெருமானை பூஜித்து ஸ்தோத்திரம் செய்பவர்கள் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர்.
* மற்ற புண்ணிய தலங்களில் பலருக்கு அன்னம் அளித்த பலன், காசியில் ஒருவருக்கு அன்னம் அளித்தாலே கிடைத்துவிடும்.
* நன்றாக பால் கறக்கக்கூடிய பசுக்களை காசியில் தானம் செய்தால், அவனுடைய ஏழு தலைமுறைகள் பலன் அடையும்.
Key word:காசி யாத்திரை,காசியில் செய்ய வேண்டிய புண்ணிய காரியங்கள்.


No comments:
Post a Comment