Pages

Friday, 14 September 2012

சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் ஆட நயன்தாராவுக்கு அழைப்பு





சூர்யா அனுஷ்கா ஜோடியாக நடித்த சிங்கம் படம் வெற்றிகரமாக ஓடியது. ஹரி இயக்கி இருந்தார். இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை சிங்கம் 2
என்ற பெயரில் ஹரி இயக்குகிறார். இதிலும் சூர்யாவே நாயகனாக நடிக்கிறார்.

அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர். இதன் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தூத்துக்குடியில் துவங்க உள்ளது. இந்த படத்தில் குத்துப் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் ஆட நயன்தாராவை அழைத்துள்ளனர்.

நயன்தாரா ஏற்கனவே விஜய்யுடன் சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார். எனவே சூர்யாவுடன் ஆட அவர் சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை நயன்தாரா மறுத்தால் ஸ்ரேயாவை அழைக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து இயக்குனர் ஹரி கூறும் போது குத்துப் பாட்டுக்கு ஆட முன்னணி கதாநாயகிகளுடன் பேசி வருகிறோம் என்றார்.
Key word:சிங்கம் 2 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads