பேரறிஞர் அண்ணாவின் 104-வதுபிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.45 மணிக்கு அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விழா மலரை
வெளியிட்டார். அதனை அமைச்சர் ஜெயபால் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். ரோட்டின் இருபக்கமும் கட்சி கொடியுடன் திரண்டு இருந்த தொண்டர்கள் புரட்சித்தலைவி வாழ்க அண்ணா புகழ் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள். தொண்டர்களை பார்த்து ஜெயலலிதா கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூ தனன், அமைப்பு செயலாளர்கள் விசாலாட்சி நெடுஞ்செழியன், ஏ.கே.செல்வராஜ், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பி. முனுசாமி, பழனியப்பன், வளர்மதி, கே.டி.பச்சைமால், செல்லூர் ராஜு, விஜய், முகமது ஜான், ராஜேந்திர பாலாஜி, நத்தம் விசுவநாதன், செந்தில் பாலாஜி, டி.கே.என். சின்னையா, மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, கோகுலஇந்திரா, மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன், செயலாளர் தமிழ் மகன்உசேன். எம்.பி.க்கள் தம்பித்துரை, செம்மலை, சித்தலப்பாக்கம் ராஜேந்திரன், பாலகங்கா, மைத்ரேயன், எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழன், கலைராஜன், கே.பி.கந்தன், வெற்றிவேல், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Key word:பேரறிஞர் அண்ணாவின் 104-வதுபிறந்த நாள் விழா.

No comments:
Post a Comment