நடிகை ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றுக் கொண்டு, அம்மாவான பின், குண்டு அம்மா ஆகி விட்டார். 50 கிலோ அழகு தாஜ்மகால், 80 கிலோ தாஜ்மகாலாகி விட்டதே, என
, பாலிவுட் ரசிகர்கள் உச் கொட்டினர். ஐஸ்வர்யாவுக்கும், இந்த கவலை ஏற்பட்டிருக்கும் போலும். இதனால், தீவிரமாக உடற்பற்சி செய்து, உடல் எடையை கணிசமாக குறைத்து உள்ளார். பழைய உடல் கட்டுக்கு திரும்பியுள்ள ஐஸ்வர்யாவின் முகத்தில், புது உற்சாகம் காணப்படுகிறது. பிரபலமான நகை கடையின் விளம்பர படத்தில் நடிப்பதற்காக வந்த ஐஸ்வர்யாவை பார்த்து, படக் குழுவினரும், ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர். அப்புறம் என்ன? ஐஸ்வர்யாவின் கால்ஷீட் டைரி, மீண்டும் நிரம்பத் துவங்கி விடும்.

No comments:
Post a Comment