Pages

Wednesday, 8 August 2012

சினேகா:பொருத்தமான கதை அமைந்தால் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பேன்

சினேகா:பொருத்தமான கதை அமைந்தால் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பேன்:

  நட்சத்திர தம்பதிகளை ஒன்றாக பார்ப்பது கடினம். ஆனால் சினேகாவும், பிரசன்னாவும் அதற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக பங்கேற்கின்றனர். விளம்பர படங்களிலும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
இந்தியில் அஜய்தேவ்கான், கஜோல் தம்பதி
 விளம்பர படங்களில் இணைந்து நடிக்கிறார்கள். காதல் ஜோடியான சயீப் அலிகான், கரீனா கபூரும் விளம்பரங்களில் ஒன்றாக வருகிறார்கள். இதன்மூலம் நிறைய சம்பாதிக்கின்றனர்.
அதுபோல் சினேகாவும், பிரசன்னாவும் விளம்பர படங்களில் சேர்ந்து நடித்து வருகின்றனர். இதுகுறித்து சினேகா கூறியதாவது:-
விளம்பர படங்களில் இணைந்து நடிக்க எங்களுக்கு வாய்ப்புகள் வருகின்றன. அதை கவுரவமாக கருதுகிறோம். இப்படி நடிப்பது எங்களுக்கு சவுகரியமாகவும் இருக்கிறது. இதுமட்டுமின்றி வேறு பல பணிகளையும் இணைந்து செய்கிறோம். சேர்ந்து சமைகிறோம். வீட்டில் சினிமாவில் நடிப்பது சம்பந்தமான விஷயங்கள் பற்றி விவாதிப்பது இல்லை. சூட்டிங் மற்றும் நான் நடிக்கும் சீன்கள் பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பிரசன்னாவிடம் கேட்பேன். நாங்கள் சேர்ந்து நடித்துள்ள விளம்பர படங்கள் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. நல்ல கதை அமைந்தால் நானும் பிரசன்னாவும் சினிமாவில் இணைந்து நடிப்போம்.
இவ்வாறு சினேகா கூறினார்.
Key word: சினேகா,சினிமா.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads