Pages

Friday, 24 August 2012

மருதாணி இலையின் மருத்துவ குணங்கள்!




மருதாணி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும் ,ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும் ,அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது .

 இறைத்தூதர் முகமது நபி அவர்களுக்கு மருதாணி  பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம்  மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு .

இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக பலலாயிரக்கனகான ஆண்டுகளாக உபயோகிக்கப்பட்ட வரலாறு உண்டு .இதைக்கொண்டு இயற்க்கை நிறங்கள் ஓவியத்திற்கு தயார் செய்யப்பட்டது .முடி கரங்கள் ,கால்கள் அழுகு படுத்தப்பட்டன .
இது ஒரு சிறந்த தோல் காப்பான் .மருதாணி  இலையைப் பற்றி அறியாத இந்திய பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில்மருதாணியும் ஒன்று.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.. இலை பித்தத்தை அதிகமாக்கும்; சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்; வேர் நோயை நீக்கி உடலைப் பலப்படுத்தி உடல் சூட்டை அகற்றும்; விதை, சதை- நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் குணம் உடையது. தமிழகம் எங்கும் வளர்கின்றது.

இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

சுருக்கமாக இது ஒரு இயற்க்கை வண்ணம் தரும் மூலிகை , உடலை குளிரச்செய்யும் ,
வீக்கத்தை கட்டுப்படுத்தும் .,கல்லிரல் தொண்டை நோய் தணிப்பவை.

மருதாணி இலையின் மருத்துவ குணங்கள் மிக அதிகம் .வட இந்தியாவில் பல இடங்களிலும்
ராஜஸ்தான் பகுதியிலுள்ள பல ஆயிரம் ஏக்கர் விளைவிக்கப் படுகிறது .
பல ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது .

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதாணி இலையை அரைத்து பற்று போட்டார்கள். அதனால் நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது.
பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் கிழ் கண்ட முறையில் பயன் படுத்தலாம்
மருதாணி இலை 6 கிராம் ,பூண்டுப்பல் , மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும்.மருதாணி  இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

மருதாணியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும்.

பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களும், பேய் பூதம் என மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் மருதாணியின் விதையை நெருப்பிலிட்டு புகைக்க மேல் கண்ட பாதிப்புகள் மாறும் என்கிறார் அகத்தியர்.

மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
மருதாணி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறையும், வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருந்தோன்றிக்கு உண்டு

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதாணிஇலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும். மருதாணி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.
.
கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும். மருதாணி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.

கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும். அழகுக்கூடும்.

மருதாணிக்கு இன்னும் பல மருத்துவத்தன்மைகளும் மாந்திரீகத் தன்மைகளும் இருக்கின்றன. அதனுடைய பூக்களில் மூத்தவளும், காய்களில் ஸ்ரீதேவியும் இருப்பதாகச் சொல்வார்கள். காய்கள், பேய்களை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். பூக்களைத்தலையணைக்கு அருகில் வைத்துக்கொண்டால் தூக்கம் அதிகம் வரும்.மருதாணி  இலைச் சாற்றால் வலம்புரி ஸ்வஸ்திகத்தை வரைந்துகொள்வது ஒரு வழக்கம் உண்டு.
Key word;அலவணம், ஐவணம், மருதோன்றி, மருதாணி.கற்பகமூலிகை

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads