Pages

Friday, 3 August 2012

டி.என்.பி.எஸ்.சி-பொது அறிவு-2

1,நாடுகளும் சின்னங்களும்
இந்தியா - அசோக ஸ்துபி
அமெரிக்கா - தங்கத்தடி
ஆஸ்திரேலியா - கங்காரு
ஸ்பெயின் - கழுகு
டென்மார்க் - கடற்கரை
பிரிட்டன் - ரோஜா
ஜெர்மனி - கதிர்மணிப் பூக்கள்
பிரான்ஸ் - லில்லி மலர்
இத்தாலி - வெள்ளை மலர்
பாகிஸ்தான் - பிறைச்சந்திரன்

  • ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் கூடன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 
  • முதலில் அச்சிடப்பட்ட நூல் விவிலியம்(பைபிள் ஆகும்)
  • நீராவி ரெயில் எனஜினைக் கண்டுபிடிக்க ஜேம்ஸ் வாட்டுக்கு 30 ஆண்டுகள் பிடித்தன்.
  • பிரான்சிஸ் டே என்பவர் 1939ம் ஆண்டு சென்னையை நிறுவி, இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்.
  • சென்னை மாநிலம் என்ற பெயர் தமிழ் நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் 3-5-1969
  • சென்னை தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட நாள் 15-8-1975
  • மெட்ராஸ் என்ற பெயர் சென்னையாக மாற்றப்பட்ட நாள் 17-17-1996
  • இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட நாள் 1-4-1935
  • ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுவது - மகசேசே விருது
  • இந்தியாவில் நாணயம் அச்சடிக்கும் இடம் நாசிக்கில் உள்ளது.
  • குங்குமப்பூ விளையும் ஒரே இந்திய மாநிலம் - காஷ்மீர்.
  • முதல் அஞ்சல் வழிக்கல்வி தொடங்கிய பல்கலைக்கழகம் டெல்லி பல்கலைக்கழகம்.
  • முதன் முதலில் ஒரு நாட்டின் வரைபடத்தை உருவாக்கியவர்கள் - பாபிலோனியர்கள்.
  • இந்தியாவின் முதல் அச்சடிக்கும் நிலையம் அமைக்கப்பட்ட இடம் - கோவா.
  • சிறந்த நாவலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு - புக்கர்.
  • வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் - லூயிஸ்
  • ஹெலிகாப்டரின் இன்னொரு பெயர் விர்லிபேர்ட் மிக வேகமாக ஓடும் பறவையினம் நெருப்புக் கோழி
  • மனிதர்களின் நாக்கு 10 செ. மீ. நீளமும், 50 கிராம் எடையும் கொண்டது. 
  • உலகத்தின் தங்கம் உற்பத்தியில் பாதியளவு தென் ஆப்பிரிக்கச் சுரங்கங்களில் இருந்து கிடைக்கிறது.
  • இந்தியாவின் மிகப் பழைமையான அணை கல்லணைதான்.
  • பிரசித்தி பெற்ற ஆஸ்கார் விருது 16.5.1929-ல் தான் முதல் முறையாக வழங்கப்பட்டது.
2,இந்திய அரசியலமைப்பு:
குடியரசு தலைவர்
இந்தியாவின் மிக உயர்ந்த அதிகாரங்கள் படைத்தவர் குடியரசுத் தலைவர் ஆவார். இவரே நாட்டின் தலைவர் ஆவார். 52ம் ஆம் சட்டப்பிரிவு இது குறித்து கூருகிறது. முப்படைகளுக்கும் அவரே தலைவர். இது குறித்து பிரிவு act-53 கூருகிறது.

எனினும் பிரதமர் தலைமையிலான அமைச்சர் அவையில் ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் செயல்படுவார். பாராளுமன்றத்தின் பரிந்த்துரைகளை மீண்டும் திருப்பி அனுப்பவும், மறு பரிசீலனை செய்ய ஆணையிடவும் குடியரசுத் தலைவர் அதிகாரம் படைத்தவர்.

குடியரசுத் தலைவர் தேர்வு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும். பாராளுமன்றத்தின் இரு சபைகளின் உருப்பினர்களும், மாநில சட்டசபை உருப்பினர்கள் அடங்கிய ஓர் கூட்டுத் தொகுதியே குடியரசுத் தலைவரை தேர்வு செய்கிறது.
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
குடியரசுத் தலைவருக்கான தகுதிகள்:
இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
மக்களவை உறுப்பினருக்கான தகுதி இருக்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் அல்லது ஊராட்சி அமைப்புகளில் ஊதியம் பெறுகின்ற ஏவரும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க முடியாது.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஊதியம் பெறும்
பதவியில் இருப்பவர்கள் என கருதமுடியாது.
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவில் வேட்பாளர் கையெப்பத்துடன் 50 பேர் முன் மொழிய வேண்டும்.
மேலும் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் தம்மை ஒரு வாக்காளராக பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும்.
காப்புத்தொகை ரூ 15,000/-

தேர்ந்தெடுக்கும் முறை

தேர்ந்தெடுக்கப்பட்ட, மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் இரகசியமான முறையில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
நியமன உறுப்பினர் வாகெடுப்பில் பங்கு பெற முடியாது.
குடியரசுத் தலைவர் மீண்டும் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிடலாம்.

3,இயற்பியல்
1. சூரியக் குடும்பத்தில் தானாகவே ஒளியை உமிழ்வது
சூரியன்
2. நீர் நீராவியாக மாறும் நிகழ்ச்சி
ஆவியாதல்
3. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது
புதன்
4. நிலவு புவியை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் எத்தனை நாள்கள்
27.3 நாள்கள்
5. நீலத்தின் அலகு
மீட்டர்
6. விசையின் அலகு
நீயூட்டன்
7. SI முறையில் நிறையின் அலகு
கிலோகிராம்
8. SI முறையில் காலத்தின் அலகு
வினாடி
9. ஊசல் கடிகாரத்தின் தத்துவம் முதன் முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது
கலிலியோ -இத்தாலி
10. அறை வெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது
கிரிக்கெட் மட்டை
11. பெட்ரோலை பொறுத்த மட்டில் கீழ்க்கண்டவற்றுள் எது உண்மை?
கொள் கலத்தின் வடிவத்தைப் பெறும்
குறிப்பிட்ட பருமன் உண்டு
குறிப்பிட்ட எடை உண்டு
12. இந்நிகழ்ச்சியில் பொருளின் பருமன் மிக அதிகமாக அதிகரிக்கிறது?
உறைதலில்
13. திண்மங்களின் கெட்டித் தன்மைக்கு காரணம் ?
கவர்ச்சி விசை
14. மேகம் குளிர்ந்து மழையாக மாறும் நிகழ்ச்சி?
நீர்ம மாதல்
15. இலேசான பொருள்களைக் கனமான பொருள்களிலிருந்து பிரித்தெடுக்க பயன்படும் முறை?
புடைத்தல்
16. தேநீர் தாயாரிக்கும் போது தூய தேநீர் பெற எம்முறையைக் கையாளுகிறோம்
வடிகட்டுதல்
17. ஓர் இயற்பியல் மாற்றத்தின் பொழுது பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
18. பழம் பழுத்தல் வேதியியல் மாற்றம்.
Key word:பொது அறிவு

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads